Thursday, May 31, 2012

கலர் கலர் கலா...கலர்!

நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டென்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் அனைவரும் பிறக்கும்பொழுதே நமக்கென்று ஒரு கலர்களோடுதான் பிறக்கின்றோம் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டு உங்கள் நிறத்தின் ஸ்பெஷாலிட்டியை,குணநலங்களை அறிந்துகொள்ளலாமே!

எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,நேசன் ப்ரௌண் கலர்,மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர்,கலா நல்ல வெள்ளை,யோகா அப்பா என்ர கலர்,அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?),அதிரா பௌர்ணமிக் கலர்,சத்ரியன்....முழுக்கருப்பு......இப்பிடி.இவை எல்லாரும்தான் உதாரணம் காட்ட எனக்குச் சுலபமாக் சிக்கிச்சினம்.

விச்சுவும் பொது நிறம்போல.(பொது நிறமெண்டா எப்பிடியெண்டு கேக்கப்படாது.பிறகு வாழைப்பழ ரொட்டி சுட்டுக் காட்டேலாது.அப்பிடியே பாக்கத்தான் வேணுமெண்டா தயவு செய்து ஓடிப்போய் அதிரான்ர பதிவில பாருங்கோ.).ஃப்ரெண்ட் கணேஸ் கண்ணாடி போட்டிருக்கிறதால சரியாத் தெரியேல்ல......(இண்டைக்கு இருக்குடி உனக்கு.ஹேமா ஓடிப்போயிடு வேலைக்கு.)

சரி...இவையள் எல்லாரும் கலருகளோட இருக்க .... தங்கட பிகர் எப்பிடிக் கலர்ல இருக்கவேணுமெண்டு தேடுவினம்.தாங்கள் கருப்புக் கண்ணனா இருந்துகொண்டு கல்யாணம் செய்யமட்டும் வெள்ளைப் பொம்பிளை சிவப்புப் பொம்பிளை வேணுமாம்.சத்ரியன் அதுதான் சிங்கப்பூரில கன்னியில்லாத் தீவில ஒற்றைக்காலில விரதம் இருக்கிறதா ஒலி விமலான்ர வானொலியின் இண்டைக்குச் சொன்ன ஃபேமஸ் நியூஸ் !


ஒவ்வொரு நிறமும் மனித இயல்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்
ஒரு கண்ணாடி.உங்கள் பிறவிக் கலரைக் கண்டுபிடிக்க ஒருவழி....!

ஆஹா....பாருங்கோ....கருப்புக் கண்ணாடி சும்மா போடேல்ல.தேவையோடதான் டீ ஆத்தேக்கயும் மா ஆட்டேக்க்கக்கூட கழட்டாமப் போட்டுக்கொண்டு இருக்கினம் சிலபேர்.கழட்டச்சொல்லி தவமாய்க் கிடந்தும் சென்னிக்க விழுந்தாலும் விழுவன் கண்ணாடி கழட்டி என்ர இமேஜைக் குறைக்க மாட்டன் எண்டே சொல்லிச் சத்தியமும் பண்ணிப்போட்டினமெண்டாப் பாருங்கோவன்.

உங்கள் பிறந்ததேதி,மாதம்,வருடம்இவற்றைக் கூட்டி வருகிற கூட்டுத்தொகையானது
ஒன்றிலிருந்து ஒன்பது எண்ணுக்குள் எந்த எண்ணாக அமைகிறதோ,அந்த எண்ணுக்குரிய கலர்தான் உங்கள் பிறவிக்கலர்...!

கண்ணாடியைப் போட்டபடியே கவனியுங்கோ எல்லாரும்......உ+ம் 22.8.1986 = 2+2+8+1+9+8+6+=36 {3+6}=9 இதைத்தான் கூட்டெண் என்கிறோம்.(கணக்குச் சரியோ?)

இனிப் பார்ப்போம்....

1ம் எண்ணுக்குரிய நிறம் சிவப்பு...

2ம் “ “ “ ஆரஞ்சு...

3ம் “ “ “ மஞ்சள்...

4ம் “” “ “ பச்சை...

5ம் “ “ “ நீலம்...

6ம் “ “ “ இண்டிகோ...

7ம் “ “ “ பர்பிள்...

8ம் “ “ “ சில்வர்...

9ம் “ “ “ பிங்க்


இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...!

சிவப்பு....

இவர்கள் தலைமை ஏற்கக் கூடிய தகுதி உடையவர்கள்.தங்கள் சுயகருத்தையே பெரிதும் நம்புகிறவர்கள்.சவால்களைச் சந்திக்கவும்,உயர்நிலையை எட்டவும்,துடிப்பவர்கள். பொறாமை கொஞ்சம் குறைவு.பிறரிடம் ஆலோசனை கேட்பார்கள்.என்றாலும் தாங்கள் நினைப்பதையே செய்பவர்கள்.....!

[எனக்கெண்டால் இது சரியாத் தெரியுது.மணியம் கஃபே ஓனரா இருக்க அவரின்ர கலர்தான் அதிஷ்டமா இருந்திருக்குப்போல !]
ஆரஞ்சு.....

இவர்கள் களைப்படையாமல் ஓயாது உழைப்பவர்கள். வெற்றிப்பாதையை நோக்கி நம்பிக்கையுடனும் ,உறுதியான முடிவுடனும் செல்பவர்கள்.தனிச்சிறப்பு வாய்ந்த எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்றும்.....!

[ஆரஞ்சு எண்டால் ஒரேஞ்.உந்தக் கலரிலயும் ஆக்கள் இருப்பினமோ...கலா நீங்கள் எழுதினதை நம்பித்தான் பதிவு போடுறன்.]
மஞ்சள்....

இவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் நட்பை உயர்வாக நினைப்பவர்கள்,உற்சாகமானவர்கள் நல்லதே நடக்கும் என்ற பாசிட்டிவ் மனப்பான்மை உடையவர்கள். கலைத்திறனும்,படைப்பாற்றலும் உடையவர்கள்.....!

[அச்சோ....உப்பிடிக் கலரில இருக்கிறவையளை மஞ்சள்காமாலை நோய் வந்தாக்கள் எண்டெல்லோ சொல்றவை.எனக்கெண்டா தெரியாது சாமிகளே.கலாதான் எழுதித் தந்தவ.]
பச்சை....

இவர்கள் சுயகட்டுப்பாடு உடையவர்கள் நடுநிலைத் தன்மைக்காகப் பாராட்டுப் பெறுபவர்கள் நம்பகத் தன்மையுடைய நண்பர்களையும்,பார்ட்னர்களையும் கொண்டவர்கள்.அறிவாளிகள் ஆனால் கொஞ்சம் பழமைவாதிகள்.சின்சியர் என்ற வார்த்தைக்கு இவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.கருணை உள்ளம் உடையவர்கள்.....!

[அச்சோ..எனக்கெண்டாத் தெரியேல்ல.கண்ணன், கிருஷ்ணன் மாதிரிச் சாமிகள் தானே பச்சைக்கரில இருக்கிறதாச் சொல்றவை.]
நீலம்....

இவர்கள் சகிப்புத்தன்மை கொண்ட ஸ்டெடி மனிதர்கள். எதிலும் துல்லியமான
முடிவை விரும்பும் கடின உழைப்பாளிகள். மற்றவர்களின் விருப்பத்திற்கு
உரிய அங்கிகாரம் அளிப்பவர்கள்.தெளிவு,அமைதி,பொறுமை விடாமுயற்சியுடன் இலக்கை அடைபவர்கள்.....!

[நீலக்கலரிலயுமோ.....கலா என்னை மாட்டிவிட்டத்தான் இந்தப் பதிவைப் போடு எண்டு எழுதித் தந்தாவோ என்னவோ.சந்தேகம் கேட்பம் எண்டால் ஆளையும் பிடிக்க முடியேல்ல.தெரியுமோ அவ சிங்கப்பூரில ஒரு ஃபேமஸான அழகுபடுத்தும் கலைஞர்.இதைவிடக் கோவில் குளம் பூசை,கவிதை பிரசுரிப்பு,புத்தக வெளியீடு,சுற்றுலா,அந்தக் கூட்டம்...இந்தகூட்டமெண்டு எப்பவும் பிஸியான ஒரு ஆள்.]
இண்டிகோ....

விளம்பரத்தை விரும்பாதவர்கள்.அடுத்தவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பவர்கள்.மனமுதிர்ச்சி உடையவர்கள், ரிலாக்ஸ் ஆக இருப்பவர்கள்,
கடினமாக உழைக்க விரும்பும் பிராக்டிகல் மனிதர்கள்,மனநிறைவு மிக்கவர்கள்.....!

[எனக்கெண்டா....உண்மையா புதுசாக் கிடக்கு.இண்டிக்கோவெண்டா முதல்ல தமிழ் என்னவெண்டு சொல்லுங்கோ.இங்கிலீஸ் நாட்டில இருக்கிற பூஸார் விபரம் சொல்லுங்கோ.]
பர்பிள் (நாவல் கலர்)....

இவர்கள் பெரும்பாலும் கலைஞர்கள்.நல்ல கவனம்,எளிதில் புரிந்து கொள்ளும் திறன்,தாராளமனம்,கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர்கள். கடினமான சூழ்நிலைகளைச் சமாளித்து எளிதாக வாழ்பவர்கள்.....!

[இந்தப் பதிவு கலாய்க்கிற பதெவெண்டும் அவ குறிப்பிடேல்ல.எனகெண்டா நம்ப முடியாமக்கிடக்கு.ஆனலும் கச்சேரியைத் தொடக்கிட்டன்.ஆனது ஆகட்டும்.தாரை தம்பட்டையெல்லாம் ... முழங்கட்டும்....உள்ளுக்குள்ள நடுங்குதப்பா.கருவாச்சி....ஒரு கிளாஸ் மாம்பழ யூஸ் உங்க குருவிட்டச் சொல்லிட்டு ஓடிப்போய் வாங்கித் தாங்கோ.ப்ளீஸ்.ஊ.கு - மணியம் கஃபேல வாங்கவேண்டாம். !]
சில்வர்....

இவர்கள் எல்லோருடனும் ஒத்துப்போகக் கூடியவர்கள் நண்பர்களிடத்தில் உண்மையான நேசத்தைக் காட்டக்கூடியவர்கள்,எந்த விஷயத்தையும் கவனமாகவும்,உறுதியுடனும் செய்யக்கூடியவர்கள்.....!

[அச்சோஓஓஓஓ .....நான் பரீஸ்க்குப் போகேக்க சந்திக்குச் சந்தி முழத்துக்கு முழம் சில்வர் கலர் பூசினபடி ஆக்கள் சிலைபோல நிண்டவை.அவையளுக்கோ இப்பிடிக் குணம் இருக்கும்......ஹிஹிஹி...கலா.....நானும் உருப்படியான பதிவாக்குமெண்டெல்லோ நினைச்சன் !]
ரோஸ்....

இவர்கள் மென்மையானவர்கள், சூதுவாது அறியாதவர்கள். நல்ல பர்சனாலிட்டி உடையவர்கள்.....!

[இதெண்டா முழுக்க முழுக்கச் சரி.எங்கட எம்ஜிஆர் என்ன கலரப்பா.இந்த ரோஸ் கலர்தானே.ரோஸ் கலருக்கே உதாரணம் எப்பவும் வாத்தியாரைத்தான் நான் எப்பவும் சொல்றனான்.வாத்தியார் எண்டா எங்கட விச்சு இல்லை ........ !]

கலா....உண்மையாவே எனக்கொரு சந்தேகம்.என்னைக் கலாய்க்கவெண்டு இந்தப் பதிவை எழுதித் தரேல்லத்தானே.இங்க வாறவை கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியேல்ல எண்டால் உங்கட பக்கம்தான் கை காட்டுவன்.நீங்களே சமாளிச்சுக்கொள்ளுங்கோ.இடக்கு முடக்கான சிநேகிதம்தான் இப்பல்லாம்.அதுசரி.....வெள்ளை ஆக்களைப் பற்றி ஏன் சொல்லேல்ல ...... உண்மையான சந்தேகம் இது எனக்கு.ஹிஹிஹிஹிஹிஹிஹி.நன்றி என் சிங்கை(க)த் தோழி....!

222 comments:

«Oldest   ‹Older   201 – 222 of 222
Angel said...

என் குருவை பார்த்து இப்புடிலாம் சந்தேகப் படுறது ....

குருவின்ர கலரு பிறக்கும்போது பிங்க் கலர் ...இப்போம் மாம்பழக் கலர் அல்லோ .... ////////


ஆங் !!! ஹேமா இதை படிச்சிட்டு மயக்கமாகிட்டேன்
பன்னீர் சோடா தெளிச்சு எழுப்பி விட்டாங்க .

Angel said...

எனக்கு எல்லா ரோஸும் பிடிச்சிருக்கே
அந்த முதல் படம் மல்டி கலர் ரோஸ் சூப்பர் !!!

Anonymous said...

ஹேமா அக்கா பல்லு விளக்கிட்டு வந்தா தான் நான் கொஞ்சுவனாம் ...இல்லை எண்டால் கருக்கு மட்டை தன் பேசுமாம்

Yoga.S. said...

கலை said...

ஹேமா அக்கா பல்லு விளக்கிட்டு வந்தா தான் நான் கொஞ்சுவனாம் ...இல்லை எண்டால் கருக்கு மட்டை தன் பேசுமாம்.///சீ.....என்ன பேச்சு இது?அக்காவப் போயி இப்புடியா கலாய்க்கிறது?அப்புறம்,உங்க அண்ணி அண்ணா வீட்டுல என்ன சொல்லிப் போயிருக்காங்கன்னு போயி பாருங்க,மருமவளே!

கலா said...

அண்ணா ,கலா அண்ணி உங்கட்ட
என்னோமோ பேசுறாங்க பதில்
சொல்லுங்கோ ....ஹ ஹ ஹா ....\\\\\\\\\
ம்ம்ம்ம்மக்கும்...காணவே இல்லை...
ஏனுங்கோ..இவ்வளவு வெக்கம்?

அதுவரைக்கும் ப்லோக்கில் இருக்கும்
அண்ணன் மார்கள் கொஞ்சம்
நிம்மதியா இருக்கலாம் ....\\\\\
அனைவர் மதியிலும் நான்தான்
இருக்கிறனுங்கோ..நின் மதியாய்...
சரிதானுங்களா?
யோகாத்தான் எவ்வளவு சரியாகப்
புரிந்திருக்கிறார் நன்றி அத்தான்


அவா மானாட மயிலாடவில பிஸியாம்! \\\\\
மானும்நானே!மயிலும் நானே!
நான் ஆடுவதை
எங்கிருந்து ஒளிந்து பாத்தீர்கள்?
அதுவும் அந்தக் கறுப்பு கண்ணாடியையும்....
தாண்டி..!ம்ம்ம... இனி இரும்புத் திரைதான்!!!



என்னாது என் மாமா வை கலாயிக்கிரிங்கோ ,,,,,

மாமா ஒன்னும் மச்சிநிச்சிய எல்லாம்
கண்டு கொள்ளவே மாட்டினம் ....எங்க
மாமாவின்ற மனசு பத்திரமா பூட்டு
போட்டு வைத்து இறுக்கம் ...
உங்கட மனசு பத்திரமா இருக்கட்டும்\\\\\

அந்தச் சாவி என்னிடம் உண்டல்லவோ..
நாத்தனாரே! இவ்வளவு கோபம் கூடாதுடா

கலா said...

அண்ணா ,கலா அண்ணி உங்கட்ட
என்னோமோ பேசுறாங்க பதில்
சொல்லுங்கோ ....ஹ ஹ ஹா ....\\\\\\\\\
ம்ம்ம்ம்மக்கும்...காணவே இல்லை...
ஏனுங்கோ..இவ்வளவு வெக்கம்?

அதுவரைக்கும் ப்லோக்கில் இருக்கும்
அண்ணன் மார்கள் கொஞ்சம்
நிம்மதியா இருக்கலாம் ....\\\\\
அனைவர் மதியிலும் நான்தான்
இருக்கிறனுங்கோ..நின் மதியாய்...
சரிதானுங்களா?
யோகாத்தான் எவ்வளவு சரியாகப்
புரிந்திருக்கிறார் நன்றி அத்தான்


அவா மானாட மயிலாடவில பிஸியாம்! \\\\\
மானும்நானே!மயிலும் நானே!
நான் ஆடுவதை
எங்கிருந்து ஒளிந்து பாத்தீர்கள்?
அதுவும் அந்தக் கறுப்பு கண்ணாடியையும்....
தாண்டி..!ம்ம்ம... இனி இரும்புத் திரைதான்!!!



என்னாது என் மாமா வை கலாயிக்கிரிங்கோ ,,,,,

மாமா ஒன்னும் மச்சிநிச்சிய எல்லாம்
கண்டு கொள்ளவே மாட்டினம் ....எங்க
மாமாவின்ற மனசு பத்திரமா பூட்டு
போட்டு வைத்து இறுக்கம் ...
உங்கட மனசு பத்திரமா இருக்கட்டும்\\\\\

அந்தச் சாவி என்னிடம் உண்டல்லவோ..
நாத்தனாரே! இவ்வளவு கோபம் கூடாதுடா

Anonymous said...

கலா அண்ணி ஏன் இப்புடி ...


உங்களுக்க்த்தன் மீ அண்ணன்களை நிச்சயம் பண்ணப் போரமேல்லோ ...


மாமா உங்களுக்கு அப்பா வரும் முறையில்....

Anonymous said...

யோகாத்தான் எவ்வளவு சரியாகப்
புரிந்திருக்கிறார் நன்றி அத்தான்
//


கடவுளே கலி காலம் தான் இதுவோ

Yoga.S. said...

கலை said...

கலா அண்ணி ஏன் இப்புடி ...


மாமா உங்களுக்கு அப்பா முறை வரும்.//////இரவு வணக்கம்,மருமகளே!ஒங்க குரல் அண்ணி காதுல வுளுந்திடிச்சு போல?கரெக்டா சொன்னீங்க,அப்பா முறை வரும்னு.அக்காவுக்கு கலா குளோஸ் பிரண்டு,அந்த முறையில கூட அப்பா தானே?

Anonymous said...

இரவு வணக்கம்,மருமகளே!ஒங்க குரல் அண்ணி காதுல வுளுந்திடிச்சு போல?கரெக்டா சொன்னீங்க,அப்பா முறை வரும்னு.அக்காவுக்கு கலா குளோஸ் பிரண்டு,அந்த முறையில கூட அப்பா தானே?///



கலா அண்ணி இஞ்ச வந்து பாருங்கோ ,....மீ ஒரே ஹாப்பி மோடில் இருகின் ...


என் மாமா உங்களை மகள் எண்டு சொல்லிப் போட்டாங்கள் ...ஹ ஹ ஹாஹா ...மருமகள் பேச்சுக்கு மாமா மறுப்பேது ,,,,எப்புடி என் நாத்தனரே ....



என் அருமை நாத்தனார்ஏஏஏஏஏஏஎ நாளை லிருந்து என் மாமா வை நீங்கள் அப்பா எண்டு தான் அழைக்கானும் ...ஓகே ? அண்டர் ஸ்டாண்ட்?

விச்சு said...

FB ID: Marimuthu c, srivilliputtur.
Mail id: c.marimuthu1@gmail.com

Asiya Omar said...

நான் கலரைப் பார்க்கிறதா? கருத்தைப் பார்க்கிறதா?

Anonymous said...

ஆங் !!! ஹேமா இதை படிச்சிட்டு மயக்கமாகிட்டேன்
பன்னீர் சோடா தெளிச்சு எழுப்பி விட்டாங்க .///


அஞ்சு அக்கா இதுகே வா ...இன்னும் மீ என்னவோ சொல்ல நினைத்தேனே

Anonymous said...

அக்கா அண்ணா பதிவு

மாமா வாங்கோ அண்ணா பதிவு

ஸ்ரீராம். said...

இதெல்லாம் பொது குணங்களாக எல்லாருக்கும் ஒத்து வந்து விடும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு சரியாக வருகிறது.(சிவப்பு) என் மனைவிக்கு சரியாக வரவில்லை! (இண்டிகோ). படிக்க சுவாரஸ்யம்.

உப்புமடச் சந்தி என்ற தலைப்பை அரட்டை அரங்கம் என்று மாற்றி விடலாம் போல...! :)))

விச்சு said...

என்னுடைய கலர் பிங்க.சூதுவாது (அப்படின்னா என்னது?) அறியாத பையன்.

ஜெய்லானி said...

//
[அச்சோ..எனக்கெண்டாத் தெரியேல்ல.கண்ணன், கிருஷ்ணன் மாதிரிச் சாமிகள் தானே பச்சைக்கரில இருக்கிறதாச் சொல்றவை.]//


அட அட ..எனக்கு ஆணந்த கண்ணீரே வருது ..அவ்வ்வ்வ் :-))))

Yoga.S. said...

ஜெய்லானி said...

//
[அச்சோ..எனக்கெண்டாத் தெரியேல்ல.கண்ணன், கிருஷ்ணன் மாதிரிச் சாமிகள் தானே பச்சைக்கரில இருக்கிறதாச் சொல்றவை.]//


அட அட ..எனக்கு ஆணந்த கண்ணீரே வருது ..அவ்வ்வ்வ் :-))))///இந்தாங்க,பிங்க் கலர் டிஷ்யூ,தொடச்சுக்குங்க!"அங்க" இதெல்லாம் குடுக்க மாட்டாங்க,ஹ!ஹ!ஹா!!!!

கலா said...

இப்படியொரு பதிவெழுதத் தூண்டிய கலாவுக்கு என் சார்பில் நன்றி சொல்லிடுங்க.\\\
நன்றி கீதமஞ்சரி
என்னோடதும் எல்லாமே சரி

அம்பாளடியாள் said...

அப்போ ஹேமா ஏழாம் நம்பரா ?????........வாழ்த்துக்கள் சகோ
இன்றுதான் இந்த ஆக்கத்தைப் படித்தேன் .என் கேள்விக்கு விடை
என்ன ????...........

கிருஷ்ணப்ரியா said...

ஆஹா, இது நல்ல புது சோசியமா இருக்கே.... நான் ஆரஞ்சு காரியா?

punitha said...

:-) உங்கள் நகைச்சுவை உணர்வு பிடித்திருக்கிறது ஹேமா.

«Oldest ‹Older   201 – 222 of 222   Newer› Newest»

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP