Wednesday, May 09, 2012

கிராமத்துக் காக்கா காட்டின பாசம் !


அன்பான இனிய பேச்சால் உலகையே கைக்குள் அடக்கலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை.எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சரிவரும் என்றும் சொல்ல முடியாது.ஆகக்குறைந்தது கடுஞ்சொற்களையாவது தவிர்க்கலாம்.ஏனெனில் நல்ல பெயர் எடுக்கப் பல காலம் பிடிக்கும்.ஆனால் இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்கிறது.மனமும் குற்றத்தால் இளைத்துக்கொண்டே இருக்கும்.

இதுதான் என் நம்பிக்கையும் கூட.அன்பு என்பது இரத்த உறவுகள் தருவது இயல்பு.முகம் காணா உறவுகளின் அன்பை அதிர்வோடு தாங்குகிறேன் இப்போதெல்லாம்.முற்பிறப்பின் தொடர் இதுதானோ.நம்பித்தான் ஆகவேண்டுமென்று கலை என் கருவாச்சிக்குட்டி நிரூபித்திருக்கிறாள்.

உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாதபோது வெளிவரும் வார்த்தைகளும் கட்டுக்குள் என்னிடமும் இருப்பதில்லை.பின்னர் அதை எண்ணி வருத்தப்படுவேன்.வார்த்தைகளில் நாகரீகம் வைத்து உடனுக்குடன் எதையும் சொல்லவோ கேட்கவோ முடிகிறது என்னால்.அது சில இடங்களில் நன்மையாகவும் இருக்கக் காண்கிறேன்.

சரி.....இந்த பலவீனத்தை எதிர்கொள்வது எப்படி?

எல்லோரையும் நேசி என்பதே தாரகமந்திரமாகிறது !

சுலபமான வழி....ஆனால் மிகக் கடினமான பயிற்சி போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வண்டி ஓட்டுதல் போல.

தெருவில் பச்சை சமிக்ஞை காட்டுவதற்கு முன்னமே புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல சர்க்கஸ் காட்டும் வாகனங்கள்.அவற்றின் இடையே வளைந்து நெளிந்து நுழையும் பலரது பொறுமையையும் சோதிக்கும் இருசக்கர முச்சக்கர வாகனங்கள்.

ஓ...எங்கோ ஒரு தவறு.எங்கே யாரால் என்று தெரியவில்லை.பின்னால் ஒரு பெரிய இடிச்சத்தம்.நமது வண்டி ஒரு குலுக்கு குலுங்கி முன்னால் தள்ளப்படுகிறது.மிகுந்த அதிர்ச்சியுடன் கீழே இறங்கிப் பின்னாலிருந்து இடித்த ஓட்டுனரிடம் வாக்குவாதம்.

அவர் சொல்லும் காரணங்கள் மேலும் கோபத்தைக் கிளறுகிறது.அதே சமயம் அவ்வண்டியின் பின்னிருக்கையில் இருந்து ஒருவர் இறங்கி உரிமையுடன் கோபப்படுகிறார்.வந்தவர் கொதிப்போடு வெடிப்பதற்கு பதிலாக அந்த நொடியிலே கோபம் மாறிக் குரல் இறங்கி பாசத்தோடு பார்த்து அணைத்து அன்பாய் வார்த்தைகள் பரிமாறிக்கொள்கிறார்.

சந்தித்தவர் பள்ளிச் சிநேகிதன்.அடையாளம் கண்ட உடனேயே சந்தோஷத்தில் கோபம் அடங்கிவிடுகிறது.பழைய அன்பிற்கு அவ்வளவு சக்தி."சரி விடு....காப்பீட்டில் வண்டியை சரி பார்த்துக்கொள்ளலாம்..."என்று சுலபமாகச் சமாதானமாகி விஷயத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறார்கள் இருவரும்.

வாழ்க்கைப் பாதையிலும் நிலைமை இதேதான்.முன்னேறத் துடிக்கும் ஒரு சிலருடைய வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை.ஒருசிலருக்கு அவரது வேகமே ஒரு பிரச்சனை.நித்தமும் வீட்டிலும் வெளியிலும் உரசல்களும் வாக்குவாதங்களும் அன்றாட வாடிக்கையாகிவிடுகின்றன.

எமது அடையாளத்தைக் காட்டும்போது எவ்வளவு இனிமையாகி விடுகிறது நம் உறவின் பலம்.அந்த உறவு தொடர அன்பும் இனிமையும் பாலம் போடுகிறது.பேச்சில் செயலில் அன்பும் இனிமையும் கொண்டவர்களை எல்லோருமே தன்னுடையவராகவே நினைத்து நெருங்குகிறார்கள்.

இது நான் கண்ட அனுபவம்.அதுவே கருவாச்சி தந்த விருதும் அவளின் கவிதையும்.அவளின் அம்முக்குட்டியாகிப்போய் அவளது மடியில் பூனைக்குட்டியாய் சுருண்டு கிடக்கிறேன்.எழும்பாத வரமொன்றையும் அவளிடமே கேட்டுக்கொள்கிறேன் !
எவருடைய செல்வத்தையும் எந்தக் காக்காவும் தூக்கிக் கொண்டு போவவில்லை.எந்த குயிலும் வந்து "இந்தா நீ வைத்துக்கொள்" என்று எதையும் தருவதில்லை.ஆனால் எல்லோரும் குயிலை விரும்புகிறோம்.காரணம் குயிலின் குரலின் இனிமைதான்.மனதை வருத்தாத அதன் இனிமை."... கத்தும் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்..." என்று கவிஞனையும் பாட வைக்கிறது.கேட்போரின் மனம் வருந்தாமல் பேசக் கற்றுக் கொண்டால் எல்லோருமே உறவுகள்தான்.எப்போதுமே சந்தோஷம்தான்.

இதற்கு உதாரணம் என் அப்பா யோகா,கருவாச்சிக் காக்கா,நேசன்,
ஃப்ரெண்ட் கணேஸ்,துஷிக்குட்டி,ரெவரி,அம்பலம் ஐயா-மாமி,ராதாகிருஷ்ணன் ஐயா-காஞ்சனா அன்ரி,விச்சு,மகி,(இ)ரவீ,கலா,சத்ரியன்,மணி,அதிரா,நிரூ ....என்று இப்படித் தொடரும் தூரத்து உறவுகள்.

அவரவருக்கான பலமும் பலகீனங்களோடும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்க ஏன் தவறிவிடுகிறோம்.நம்மிலும் நம்மோடு இருப்பவர்களிடமும் ரசிக்கத்தக்க எத்தனையோ விஷயங்களைக் கவனிக்கத்தவறி வெறுமனே கடந்துபோய்க்கொண்டிருப்பதா வாழ்வு....!

103 comments:

MARI The Great said...

அருமையான கருத்துக்களை கொண்ட சிந்திக்க வைக்கும் பதிவு ..!

பால கணேஷ் said...

அன்பினாலானது வாழ்க்கை. நாம் நமக்கென்று எதையும் எடுத்து வரவோ எடுத்துப் போகவோ போவதில்லை. கிடைக்கும் உறவுகளையும் நட்புகளையும் உலகையும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கக் கற்றால் வாழ்வு அழகாகும். அர்த்தமுள்ளதாகும், (என்னையும் சேர்த்து) இத்தனை நல்ல உள்ளங்களின் அன்பைச் சம்பாதித்திருப்பதில் சந்தோஷப்படுங்கள் ப்ரெண்ட்!

பால கணேஷ் said...

இப்படியான பாசம் முற்பிறப்பின் தொடர்ச்சி என்று என் கருத்தை நேசரின் வலையில் இட்டிருந்தேன். நீஙகளும் அதையே எழுதியிருப்பதில் உள்ள ஒற்றுமை கண்டு வியக்கிறேன் ஹேமா...

செய்தாலி said...

உண்மையில்
வாசித்து முடித்தபின்
சிறிது மௌனம் கொண்டேன்
வரிகளின் மெய்யுணர்ந்து

பக்குவபட்ட
மனதின் வார்த்தைகள்
எப்பதுமே கேட்டல் எழுதினால் சொன்னால்
இளகுவாக இருப்பதுண்டு
அதை உங்கள் வரிகளில் காண முடிந்தது

//இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்கிறது.மனமும் குற்றத்தால் இளைத்துக்கொண்டே இருக்கும்// முற்றிலும் உண்மை

கருவாச்சி (கலை )
அன்பில் கள்ளம் இல்ல குழந்தை

வலை உறவுகளில்
நல்ல பழகுவார்கள் பிறகு எதோ ஒரு சின்ன விஷயத்திற்கு சண்டை இட்டுக் கொள்வார்கள்
பிறகு போட்டியும் பொறாமை தான் நீளும்
சுயநலம் ,குரோதம் ,காழ்ப்பு இப்படி இன்னும் நிறைய பேர் சண்டையிட்கிரார்கள்

கலையின் பாசமும் நேசமும் உங்களின் நல் உறவை காட்டுது

வலை உறவுகளிடத்திலும் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்கு
என் தங்கச்சி கலை ஒரு உதாரணம் (உங்கள் அன்பும் )

பாசப் பதிவு
சொல்லும்
நேசம்

Anonymous said...

மாமா ஓடி வாங்கள் உங்கட செல்ல மகள் பதிவு போட்டு இருக்கங்கள்

Anonymous said...

அன்பான இனிய பேச்சால் உலகையே கைக்குள் அடக்கலாம் என்பது உலக வழக்கு. /////


ஆரம்பமே அசத்தல் ....கலக்குங்க கவிதாயினி .....

Anonymous said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அக்கா ...உங்க பாசம் கண்டு தான் அக்கா நினைப்பேன் ஹேமா அக்கா மாறி இருக்கணும் எண்டு ,,,,

எனக்கு உங்கள மாறி எல்லாம் வடிவா பேசத் தெரியாது .....

எனக்கு எப்புடி சொல்லுரதுன்னுத் தெரியல ...எனக்கு எல்லாரையும் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் அக்கா ,,

Anonymous said...

இதுதான் என் நம்பிக்கையும் கூட.அன்பு என்பது இரத்த உறவுகள் தருவது இயல்பு.முகம் காணா உறவுகளின் அன்பை அதிர்வோடு தாங்குகிறேன் இப்போதெல்லாம்.முற்பிறப்பின் தொடர் இதுதானோ.நம்பித்தான் ஆகவேண்டுமென்று கலை என் கருவாச்சிக்குட்டி நிரூபித்திருக்கிறாள்.
//////////////



அக்கா நானும் கணேஷ் அண்ணா நீங்கள் சொல்லுறதை ஒற்றுக் கொள்ளுறேன் முற்பிறவி யின் தொடர்ச்சியோ ,,,,,


அக்கா உங்களிடம் அதிரா அக்கா விடம் இருந்து தான் பாசமா பேசணும் எண்டு கற்றுக் கொள்ளுறேன் ....

Anonymous said...

பூனைக்குட்டியாய் சுருண்டு கிடக்கிறேன்.எழும்பாத வரமொன்றையும் அவளிடமே கேட்டுக்கொள்கிறேன் ////


அக்கா பாசத்தினை வார்த்தையில் கொட்ட்டி பேசும் போது கண்கள் கலன்குது அக்கா ..என் அன்பு உங்களை சுற்றி எப்போதும் இருக்கும் நீங்கள் தொலைவில் இருந்தாலும் என் நினைவு உங்களை சுற்றி வலை இட்டுக் கொண்டே இருக்கும் அக்கா..



அக்கா உண்மையில் உங்களின் மடியில் தான் அக்கா நாங்கள் அனைவருமே அடைபட்டுக் கிடக்கிறோம் ...

ஹேமா said...

கலையம்மா...சுகம்தானே.வேலையால வந்தாச்சோ.நான் இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப்போறன்.பிந்தித்தான் வருவன்.

உன்னோட சேர்ந்து நானும் நல்ல சந்தோஷமாய் இருக்கிறன்.அன்பு-இதைவிட வாழ்வில் என்ன அதி உச்சமாய் இருக்கப்போகிறது.

அப்பா வந்தால் என் அன்பைச் சொல்லிவிடு.சந்திக்கலாம்.உங்களோடு சேர்ந்து இப்போதைய உணர்வைப் பகிர்ந்துகொள்ள நேரம் விடுதில்லை.போய்ட்டு வாறனடா குட்டி !

Anonymous said...

செய்தாலி said...
உண்மையில்
வாசித்து முடித்தபின்
சிறிது மௌனம் கொண்டேன்
வரிகளின் மெய்யுணர்ந்து ////////////


செய்தாலி அண்ணா உங்கள் வார்த்தைகளுக்கு எல்லாம் நான் என்ன சொல்லுறது என்டேத் தெரியல ...

உங்களுக்கு நன்றி சொல்லி முடிக்க முடியல அண்ணா ....

நீங்கள் என் மேல் கொண்ட பாசம் ....................எப்புடி சொல்லுரதுன்னேத் தெரியல .....

ஒவ்வொருவரும் எவ்வளவு அன்பு ....

இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் அண்ணா .............

Unknown said...

ம்ம்ம்..யோசிக்க வைக்கிறீங்க!

Anonymous said...

உணர்வைப் பகிர்ந்துகொள்ள நேரம் விடுதில்லை.போய்ட்டு வாறனடா குட்டி !///

சந்தோசமாய் போயிட்டு வாருங்கள் அக்கா ...நீங்கள் எப்போதும் இதே போல் சந்தோசமாய் இருக்க வேணும ...அது தான் எங்கள் அனைவருக்கும் வேணும அக்கா ......

இரவு நீங்கள் கண்டிப்பாய் லேட் தான் நினைக்கேன் ,...மாமா அண்ணாவிடம் நான் சொல்லி விடுறேன் அக்கா ...

டாட்டா டாட்டா .............

Yoga.S. said...

பகல் வணக்கம்,மகளே!!!என்ன எழுதுவது/சொல்வது என்றே தெரியவில்லை.திக்கு முக்காடிப் போகிறேன்.கலையின் அன்பு.................எவ்வளவு குதூகலம்?இந்த அக்கா தங்கை உறவு/பாசம் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

Yoga.S. said...

இதுக்கும் மைனஸ் ஒட்டு,ஹ!ஹ!ஹா!!!!!

Yoga.S. said...

எல்லோரும் குயிலை விரும்புகிறோம்.காரணம் குயிலின் குரலின் இனிமைதான்!///ஓ...ஓஹோ!கலை கறுப்பென்று சொல்ல வருகிறீர்கள்,அப்படித்தானே?ஹி!ஹி!ஹி!பாட்டெல்லாம் கூடப் பாடியியிருக்கிறாங்கள் ,கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலர் எண்டு,ஹ!ஹ!ஹா!!!!

Unknown said...

நேசம் மிக்கப் பாசக் கட்டுரை!
அருமை!
கலையின் அன்பே விலையில்
இன்பே!

வாழ்க!வளர்க!

புலவர் சா இராமாநுசம்

கூடல் பாலா said...

வாழ்க்கையை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு !

பவள சங்கரி said...

அன்பின் ஹேமா,

மிகப்பக்குவமான எழுத்து. கவர்ந்துவிட்டீர்கள் தோழி.... நம் உறவுகளையும், நட்புக்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டால் எந்த பிரச்சனையுமில்லை.. நமக்காக இன்னொருவர் மாற வேண்டும் என்று நினைப்பதே தவறு... நாம் அனுசரித்துப் போக நினைத்தால் உறவுக்குப் பலம் கூடும்.

அன்புடன்
பவளா

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த அருமையான அனைவருக்குமான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 7

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஹேமா.

/அவரவருக்கான பலமும் பலகீனங்களோடும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்க ஏன் தவறிடுகிறோம்./

சிந்திக்க வைக்கும் ஒவ்வொருவரையும்.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு கட்டுரை. வாழ்த்துகள்

கலா said...

பேச்சில் செயலில் அன்பும் இனிமையும்
கொண்டவர்களை எல்லோருமே
தன்னுடையவராகவே நினைத்து
நெருங்குகிறார்கள்\\\\\\\\\\\

.கேட்போரின் மனம் வருந்தாமல் பேசக்
கற்றுக் கொண்டால் எல்லோருமே உறவுகள்தான்.
எப்போதுமே சந்தோஷம்தான்.\\\\\\\\\

என்னையும் உங்கள் நட்புக்குள்
அமர்த்தி
அணைத்துக் காக்கும்
உங்கள் சிநேக,உணர்வான
இறைக்கைகளின்
ஸ்பரிசத்தில்...
“சுடுபடாமல்” சுகமாய்...
பிரியமாய்...வெளிவந்த
உங்கள் அன்புக்கு!
என்,..
மனமார்ந்த நன்றிகள்
என் அன்புத் தோழியே!

தனிமரம் said...

வணக்கம் ஹேமா  என்ன சொல்லவது எனத் தெரியவில்லை எனக்கு உங்களின் கவிதை உணர்வில் கலந்து பின் தொடர்ந்தேன் பின் கலையின் பாசம் உங்களின் வழிகாட்டல் என நானும் கொஞ்சம் பாசத்தில் தடுமாறித்தான் போகின்றேன் யோகா ஐயாவின் குதுகலம் கூட எனக்கு இன்னும் சிந்திக்க வைக்கின்றது.கணேஸ் அண்ணா சொல்லியது போல மகேந்திரன் அண்ணா ,ரெவெரி மற்றும் அதிரா என இந்தக் வலைக்குடும்ப  உறவு ஏதோ முற்பிறப்பின் தொடர்ச்சியாகத் தான் நானும் பார்க்கின்றேன்!

தனிமரம் said...

கலையின் விருது தந்தது பல உற்சாகம் அதில் நீங்கள் தீட்டிய பதிவு நெஞ்சில் கொஞ்சம் மீளரீங்காரம் இடவைக்குது நினைவுகளை.இந்தப் பாசமான உறவுகளை எப்படி தவிக்க விட்டு விடைபெறுவது விரைவில் ஆனாலும் பாசம் எப்படியும் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கு ஹேமா .

தனிமரம் said...

காக்காவை குயில் என்று விட்டீர்களே:)))))

தனிமரம் said...

வலையில் வந்த உறவாகிப்போன இந்த அக்காள் தங்கை பாசம் எந்த புயலிலும் அடிபட்டுப் போகாமல் தொடர வேண்டி பிரார்த்தனை செய்கின்றேன் ஒரு அண்ணாவாக இருந்து.

தனிமரம் said...

அன்பால் தொடங்கி விட்டீர்கள் பதிவை கவிதாயினி ஆனால் சில நேரங்களில் இந்த அன்புதான் அதிகம் காயமும் படுத்துகின்றது சிலரை.

தனிமரம் said...

பக்குவப்பட்ட மனநிலையில் இருந்து இந்தப்பதிவு வந்து இருக்கின்றது உங்கள் மனதைக்காண்ணாடி போல வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கு.உப்புமடத்தில் இந்த தனிமரத்திற்கும் ஒரு இடம் கொடுத்தது  மகிழ்ச்சியாகவும் சந்தோஸமாகவும்  கொஞ்சம் கர்வமாகவும் இருக்கு ஹேமா நன்றி என்று மட்டும் சொல்லி தள்ளிப்போக விருப்பம் இல்லை உங்கள் அன்புக்கு நன்றி  எந்த நிலையிலும் காயப்ப்டுத்தாமல் பயணிக்கணும் என்று சிந்திக்கத் தூண்டுகின்றது.

கலா said...

ஹேமாவை ஒரு சோதரியாய்...தோழியாய்,
மகளாய்ப் பார்க்கும் அத்தனை ஆண்உறவு
நண்பர்களுக்கும்,நட்புக்கும்....
என் இதயபூர்வமான நன்றிகள்

இது ஏனென்றால்...!

{ஒரு பெண் எழுத்தில் பல..பல..
எதிர்புகள்,மனகஷ்ரங்கள்,கேலிகள்,
ஈகோக்கள் எனப் இன்னும் பல...
இப்படி இருக்கும்போது
ஹேமா ,எதிலும் சிக்காமல்..
நன்றாக அவர் வலைத்தளங்களை
கண்ணியமுடன் இட்டுச் செல்வதற்கு
பெண்களைவிட ஆண்களின் துணை மிக,மிக
அவசியம் அது உங்கள்
அனைவரிடமும் இருந்து கிடைத்திருக்கிறது
அதற்காக....}


ஈழமென்றொரு இரக்கம்காட்டி
பெண் என்றொரு நேசம்கூட்டி
பாசமென்றொரு வலைபின்னி
பிரியாமல்...பிரியமாய்
அசிங்கம் வராமல்..
காவல்காக்கும் சிங்கங்களே!

இவளைச் சுருக்கென்று
எழுத்தில்
யாரும் குத்தினால்...
அவர்களைக்
கொட்டும் குளவிபோல்
{சுட்டி}சுற்றிவரும்
என் ஆண் நட்புகளே!


இத்தருணத்தில்,இவ் இடுகை
கொடுத்த சந்தர்பத்தில்
உலகுவாழ் ஆண்தோழ நட்புகளுக்கு
என் மனமார்ந்த நன்றி!நன்றி!! நன்றிகள்!!!

Angel said...

//எல்லோரையும் நேசி என்பதே தாரகமந்திரமாகிறது !//
unconditional love !!!!!!!!!!!

இதுதான் ஹேமா இப்ப உள்ள காலத்துக்கு தேவையான ஒன்று .இதுதான் ஹேமா இப்ப உள்ள காலத்துக்கு தேவையான ஒன்று .
கலைகுட்டியின் விருதும் கவிதையும் உங்களது பதிவும் தேனில் ஊறிய பலாச்சுளை .

Angel said...

கொஞ்சநாள் வலைப்பக்கம் வரமாட்டேம்பா .அலுவல்/ மகள் எக்சாம்
என்று பிசி .நேரமிருக்கும்போது வந்து கண்டிப்பா ஹாய் சொல்கிறேன் .

நிரஞ்சனா said...

எல்லாரையும் அவுங்கவங்க ப்ளஸ், மைனஸோட ஏத்துக்கிட்டு நேசிக்கணும்னு நீங்க சொல்லியிருக்கிறது ரொம்பச் சரி ஹேமாக்கா. காக்கான்னு நீங்க பாசமாக் கூப்பிடுற கலைக்காவின் அன்பை உணர்ந்தபோது எனக்கும் இதெல்லாம் தோணிச்சு. ஆனா இப்படி அழகா வெளிப்படுத்த நான் கவிதாயினி இல்லையே... தொடரட்டும் இந்த அன்பும், பாசமும்! அப்புறம்... எனக்கு்க் கூட ஒரு தடவை உங்களை அம்மூன்னு கூப்பிடணும்னு ஆசையா இருக்கு. கோவிச்சுக்க மாட்டீங்களே அம்மூக்கா!

Yoga.S. said...

வணக்கம் (கலா)பாட்டிம்மா!எப்படி இருக்கிறீர்கள்?சில நாட்கள் ஆயிற்று பார்த்து/பேசி!இன்னும் நான் கண்ணாடி மாற்றவில்லை!அதை ஏன் கேட்கிறீர்கள்?இங்கே ஐரோப்பாவில் கண் வைத்தியரைப் பார்க்க மூன்று மாதம் காத்திருக்க வேண்டும்.கண் கொஞ்சம் தெரிவதால் எழுதிக் கொண்டிருக்கிறேன்!உங்கள் அன்புக்கு நன்றி.சில கிட்டாதவைகள் இப்போது கிட்டுவதாக நினைக்கிறேன்.உலகம் உருண்டையாமே,இல்லையா????

Anonymous said...

எல்லோரும் குயிலை விரும்புகிறோம்.காரணம் குயிலின் குரலின் இனிமைதான்!///ஓ...ஓஹோ!கலை கறுப்பென்று சொல்ல வருகிறீர்கள்,அப்படித்தானே?///

மாமா உங்கட மருமகளை நீங்களே ..............................அப்புடி சொல்லலாமா ...

மக்கள் தப்பு செய்தா சாமிக் கிட்ட முறையிடலாம் ...

அந்த சாமியே தப்பு செய்தா ஆர் கிட்ட மாமா முறையிடுவது ....சொல்லுங்க

Anonymous said...

இந்தப் பாசமான உறவுகளை எப்படி தவிக்க விட்டு விடைபெறுவது விரைவில் ஆனாலும் பாசம் எப்படியும் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கு ஹேமா .///


அண்ணா என்ன சொல்லுரிங்கள் ...இந்த மாறி லாம் சொள்ளதிங்கள் ....சில நாள் ஓய்வு வேணா (ஒரு பத்து நாள் ) எடுத்து விட்டு திருபடியும் வாங்கள் ...இனிமேல் இப்புடிலாம் சொள்ளதிங்கள் ..

Anonymous said...

கொஞ்சநாள் வலைப்பக்கம் வரமாட்டேம்பா .அலுவல்/ மகள் எக்சாம்
என்று பிசி .நேரமிருக்கும்போது வந்து கண்டிப்பா ஹாய் சொல்கிறேன் //


அஞ்சு அக்க்க்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ குட்டிஸ் தானே எக்ஸாம் எழுதப் போறா ...நீங்களா எழுதுரிங்கள் ..ஒழுங்கா வாங்க சொல்லிட்டேன்

Yoga.S. said...

கலை said...
மாமா உங்கட மருமகளை நீங்களே ..............................அப்புடி சொல்லலாமா ...

மக்கள் தப்பு செய்தா சாமிக் கிட்ட முறையிடலாம் ...

அந்த சாமியே தப்பு செய்தா ஆர் கிட்ட மாமா முறையிடுவது ....சொல்லுங்க?////நானா அப்படிச் சொன்னேன்?அக்கா தான்......................குயிலப் புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம் ............................ அப்புடீன்னு பாடுறாங்க!நீங்க .....................ச்சும்மா!கருப்புன்னாலும் எனக்கு என் மருமவப் புள்ள அழகுதானே?

வேர்கள் said...

// இது நான் கண்ட அனுபவம்.அதுவே கருவாச்சி தந்த விருதும் அவளின் கவிதையும்.அவளின் அம்முக்குட்டியாகிப்போய் அவளது மடியில் பூனைக்குட்டியாய் சுருண்டு கிடக்கிறேன்.எழும்பாத வரமொன்றையும் அவளிடமே கேட்டுக்கொள்கிறேன் !//

இந்த இடத்தில படிக்கும்போது மனம் நெகிழ்ந்து போனது
கலை... அந்த பூனைக்குட்டியை எழுப்பாதீர்கள்

//ஹேமாவை ஒரு சோதரியாய்...தோழியாய்,
மகளாய்ப் பார்க்கும் அத்தனை ஆண்உறவு
நண்பர்களுக்கும்,நட்புக்கும்....
என் இதயபூர்வமான நன்றிகள்//

இப்படி ஒரு நன்றி அறிவித்தல் செய்து கலா அவர்களும் தங்கள் மேல் கொண்ட அக்கறையை நினைக்கும்போது மகிழ்ச்சியாய் இருந்தது....

Yoga.S. said...

அண்ணா பதிவு போட்டிருக்கிறார்,வசதிஎன்றால் வாருங்கோ,மருமகளே!

ராஜ நடராஜன் said...

ஹேமா!கவிதையும்,உரைநடையும் உங்களுக்கு இயல்பாக நடைபோடுகின்றன்.குண்டு எழுத்துக்கள் சிந்தனையை தூண்டுகின்றன.

Anonymous said...

அக்கா தான்......................குயிலப் புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம் ............................ அப்புடீன்னு பாடுறாங்க!நீங்க .....................ச்சும்மா!கருப்புன்னாலும் எனக்கு என் மருமவப் புள்ள அழகுதானே?////



நல்லாப் பாடுரிங்கள் மாமா ...சூப்பர் பாட்டு ....அப்பாவும் மகளும் புகழ்ரான்களா இல்ல ஒட்டுராங்கள ஒண்ணுமே புரியலே ...ரெண்டுத்துக்கும் சேம் ரிஅக்சண் .....

Anonymous said...

இந்த இடத்தில படிக்கும்போது மனம் நெகிழ்ந்து போனது
கலை... அந்த பூனைக்குட்டியை எழுப்பாதீர்கள்
/////

அந்த பூனைக் குட்டி என் செல்லம் ...நான் பத்திரமா பார்த்துக் கொள்வேன் வேர்கள் ...மிக்க நன்றி வேர்கள் /

இப்படி ஒரு நன்றி அறிவித்தல் செய்து கலா அவர்களும் தங்கள் மேல் கொண்ட அக்கறையை நினைக்கும்போது மகிழ்ச்சியாய் இருந்தது....///


உண்மையாதான் கலா அக்கா ..ஹேமா அக்கா வின் மேல நீங்க வைத்து இருக்கும் அன்பு அப்புடியே தெரியுது அக்கா ...நல்லத் தோழி அக்கா நீங்கள் ஹேமா அக்காளுக்கு ...எப்போதும் இப்பம் மாறியே ஹேமா அக்களோடு நீங்கள் இருக்க வேணும் கலா அக்கா ...மிக்க நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

வந்துட்டேன்ன்ன்ன்ன்:)).. தலைப்பைக் கண்டுபிடித்து பிளேன் எடுத்து பஸ் எடுத்து முடிவில் மாட்டு வண்டி பிடிச்சு வந்து சேர நேரமாகிட்டுதூஊஊஊஊஊ..:)) மன்னிக்கோணும் ஹேமா....

முற்றும் அறிந்த அதிரா said...

என்ன ஒரே பீலிங்ஸாக்கிடக்கே... எல்லாத்துக்கும் காரணம் என் சிஷ்யைதானோ?:))...

ஹேமாவா இப்பூடிப் ஃபீல் பண்ணுவது? முடியல்ல சாமீஈஈஈஈ நம்ப முடியேல்லை:))

முற்றும் அறிந்த அதிரா said...

இடையிடை நல்ல நல்ல தத்துவங்கள் சொல்லியிருக்கிறீங்க... சிந்திக்க வைக்குது...

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”

“இதுவும் கடந்து போகும் ஹேமா”.

விச்சு said...

தூரத்து உறவுகளில் என் பெயரை விட்டுட்டீங்க... இது மன்னிக்க முடியாத குற்றம். தயவுசெய்து ஒரு சுவீட் வாங்கிக்கொடுத்து என் பெயரையும் சேர்த்துக்கோங்க.(ப்ளீஸ்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹேமான்னா ஹேமாதான்...

ராதாகிருஷ்ணன், காஞ்சனா

கலா said...

.சில கிட்டாதவைகள் இப்போது
கிட்டுவதாக நினைக்கிறேன்.\\\\\\\
மிக்க மகிழ்ச்சி இது..இதுதான்..
வேண்டும்.

கிடைக்கவில்லை,கிடைக்கவில்லையென்று
வருந்துவதைவிடக்....
கிடைத்ததை வைத்து வாழக்கற்றுக்க
வேண்டும்.கிடைக்கும்,கிடைக்கும் என்று
ஆழ்மனதில் {எதையும்....} பதித்துவிட்டால்
என்றோ ஒருநாள் நிட்சயமாகக்
கிடைக்கும் தலைவா!


உலகம் உருண்டையாமே,இல்லையா????
யார் சொன்னது? இதெல்லாம் அப்போ!
இப்போ...
பேராண்டி! உலகம் ஒரு புள்ளிதானப்பு
அதன்படியால்தான் இப்புள்ளியிலிருந்து
கோலம்போட்டுக் கும்மியடிக்கின்றோம்
சந்தியிலிருக்கும்
ஹேமாவின் வீட்டுமு

கலா said...

வீட்டுமுற்றத்தில்!
என்று போட்டேன்

ஏனோ!உங்களுடனான...
வெட்கத்தில்..
மு மட்டும் வந்திருக்கிறது

ற்றத்தில் {இது}
மறைந்து விட்டது .... மன்னிப்பு

கலா said...

இந்த இடத்தில படிக்கும்போது
மனம் நெகிழ்ந்து போனது\\\\\

நானும் நெகிழ்கிறேன்
உங்கள் மென்மையான
இதயம் கண்டு நண்பரே!



இப்படி ஒரு நன்றி அறிவித்தல் செய்து
கலா அவர்களும் தங்கள் மேல்
கொண்ட அக்கறையை நினைக்கும்போது
மகிழ்ச்சியாய் இருந்தது....\\\\\\\

அக்கரையில் இருந்து
அக்கறையுடன் படித்து
இக்கரையில் இட்ட
எழுத்துச் சொல்கண்டு...
நானும் மகிழ்கிறேன்....
உங்கள் ஊக்கமூட்டும்
உணர்வை நினைத்து நண்பரே!
மிக்க நன்றி

கலா said...

எப்போதும் இப்பம் மாறியே ஹேமா அக்களோடு
நீங்கள் இருக்க வேணும்
கலா அக்கா ...மிக்க நன்றி\\\\\\\\\\\

கலை! இப்படி எழுதினது
சேச்..சே...எனக்குத் சுத்தமாப் பிடிக்கல்ல
இப்படியெல்லாம் கன்னாபின்னா..என்று
எழுதிச்,சம்மந்தமில்லாமல்..புரிகிறது...
கவனம்!இப்படிக் குறை யாய் எழுதலாமோ?

என்ன...அந்தக் கண்கள் மருண்டு,உருளுவது
எனக்கும் தெரிகிறது .கலைஐஐஐஐஐஐய்யய
பயந்துவிட்டீர்களோ!
அதாவது..
இப்பம் மாறியே{இது தப்புத்தானே!}
இப்ப மாதிரியே! இதுதானே சரி?


அக்களோடு {இது தப்புத்தானே!}
அக்காளோடு இது சரிதானே!
அப்பாடா... காட்டின பயத்தில் காச்சல்கூட
வந்திருக்கலாம்....
எதற்கும் நான் இங்கிருந்தே,மந்திரிக்கிறேன்...
உங்கள் அன்புக்கும்,பாசத்துக்கும்
மிக்க நன்றி கலை.

சத்ரியன் said...

ஹேமா,

எதோ ஓர் ஊரிலிருக்கும் நீர்நிலையிலிருந்தும், தாவரத்திலிருந்தும் சூரியனால் ஆவியாக்கப்பட்ட நீர் மேகமாகி வானில் மிதந்து ஏதோவொரு ஊரில் மழையாக பொழிவது போல தான் இந்த ‘இணைய சொந்தங்களின்’ அன்பும், அரவணைப்பும்.

இந்த சொந்தங்களிடம் தான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பை பெற முடிகிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.

கருவாச்சியின் அன்பால் நெகிழ்ந்து அதையும் கட்டுரையாய் பகிர்ந்திருக்கும் ஹேமாவிற்கு பாராட்டுக்கள்.

உலக சினிமா ரசிகன் said...

யாதும் ஊரே!யாவரும் கேளீர்!!
அன்பே எங்கள் உலக தத்துவம்.
என்ற நினைத்தாலே இனிக்கும் பாடல் நினைவில் ரீங்காரமிடுகிறது..இப்பதிவை படித்ததும்...

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!நேசன் தளம் பார்த்தேன்.நிச்சயமாக இரண்டு பேருக்குமே கருக்குமட்டை அடி காத்திருக்கிறது.நல்லெண்ணெய் தயாராக வைத்திருக்கிறேன்,ஹ!ஹ!ஹா!!!!நேரம் எடுக்கும் என்று காலையிலேயே சொன்னதால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.

Yoga.S. said...

கலா said...
உலகம் உருண்டையாமே,இல்லையா????
யார் சொன்னது? இதெல்லாம் அப்போ!
இப்போ...
பேராண்டி! உலகம் ஒரு புள்ளிதானப்பு
அதன்படியால்தான் இப்புள்ளியிலிருந்து
கோலம்போட்டுக் கும்மியடிக்கின்றோம்
சந்தியிலிருக்கும்
ஹேமாவின் வீட்டுமு////காலை வணக்கம்,பாட்டிம்மா!எனக்கென்ன தெரியும்,நான் தான் சின்னப் பையனாச்சே?போகட்டும்,அதென்ன, ஹேமா வீட்டு மு ?முற்றமா?,இல்லை முன்பாகவா?ஹி!ஹி!ஹி!!!!!

செய்தாலி said...

சத்ரியன் said...

//எதோ ஓர் ஊரிலிருக்கும் நீர்நிலையிலிருந்தும், தாவரத்திலிருந்தும் சூரியனால் ஆவியாக்கப்பட்ட நீர் மேகமாகி வானில் மிதந்து ஏதோவொரு ஊரில் மழையாக பொழிவது போல தான் இந்த ‘இணைய சொந்தங்களின்’ அன்பும், அரவணைப்பும்.

இந்த சொந்தங்களிடம் தான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பை பெற முடிகிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை//


முற்றிலும் உண்மை நண்பா
உள்ளூர உணர்ந்து இருக்கிறேன்

சசிகலா said...

அன்பு ஒன்றே அவசியமானது என்பதை வலியுறுத்தும் வரிகள் அருமை .

Seeni said...

AZHAKAA SOLLIDEENGA!

ANPAI!

Anonymous said...

டு கலா அண்ணி ....

முதலில் ஆரத்தி எடுக்கிறேன் அப்புறமாய் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாங்கோ அண்ணி ....


ஆடப் பாடத் தெரியும் தானே...இல்லைஎன்டாலும் பரவாயில்லை பொறுமையா கற்றுக் கொள்ளுங்கள் ...

கண்டிப்பாய் என்ர அண்ணன்கலில ஒருவர் உங்களுக்குத்தான் ...

தைரியமாய் இருங்கோ அண்ணி ,,,,

அண்ணா கிட்ட நானே பேசுறேன் ,,,, இவ்ளோ வெட்கம் கூடாது அண்ணி உங்களுக்கு ....


அண்ணா சந்தியிலே உட்காந்து இருக்காங்க எண்டு கவலை கொள்ளதிங்கோ ...கல்யாணம் கட்டிக் கிட்ட பொறுப்பு தான வந்து வேலைக்கு போவாங்கள் ...


உங்கள மாறி ஒரு அண்ணி எங்க அண்ணனுக்கு கிடைக்க நாங்க கொடுத்து வைத்து இருக்கனும் ....


நீங்கள் எனக்கு அண்ணி முறை ...அப்புடி எண்டால் நான் உங்களுக்கு என்ன முறை வேணும் ?....

Yoga.S. said...

இரவு வணக்கம்,மகளே!!!!

சுதா SJ said...

அக்காச்சி........................................... :)))

சுதா SJ said...

அக்காச்சி.... பதிவால மனசை தொட்டுட்டீங்க, பதிவை திரும்ப திரும்ப படிச்சேன் அக்காச்சி..... ரெம்ப சந்தோஷமா இருக்கு :))))))))))))

பதிவுலகில் எல்லோருக்கும் ஹேமா அக்காச்சியை பிடிக்கும், ஆனால் அந்த ஹேமா அக்காச்சிக்கு துஷிக்குட்டியையும் பிடிச்சு இருக்கு என்பது அவ்ளோ ஹப்பியா பெருமையா இருக்கு...

தேங்க்ஸ் மை அக்காச்சி....

அக்காச்சி... ஒன்று தெரியுமா?? வார மாசம் ரெண்டாம் திகதி அக்காச்சி இடத்துக்கு அதான் சுவிஸ் வாரோம் இல்ல... :))

அண்ணாவின் கல்யாண வீடு வாற மாசம் பத்தாம் திகதி . அதுக்குத்தான்.... :)))

ரெண்டு வாரம் சுவிஸ்ல ஒரே சுத்தல்தான் அக்காச்சி.... :))))))

அதான்... இப்பவே ப்ளாக் பக்கமல் வர டைம் இல்ல அக்காச்சி :)))

அதான் உங்கள ரெம்ப மிஸ் பண்ணுறேன் :((

ஜ மிஸ் யூ அக்காச்சி..

அப்புறம் யோகா அப்பா, கலை , நேசன் அண்ணா எல்லோரையும் மிஸ் பண்ணுறேன்.... :(

சுதா SJ said...

எப்பவுமே ஜ லவ் மை ஹேமா அக்காச்சி................

கலா said...

முதலில் ஆரத்தி எடுக்கிறேன் அப்புறமாய்
வலது காலை எடுத்து வைத்து
உள்ளே வாங்கோ அண்ணி ....\\\\\\\\

ஹேமா, இங்க என்ன நடக்கிறது...?
கலை என்னமோ அண்ணிகிண்ணியென்று.....
சொல்லுறாங்க
ஏன்புள்ள!கலை கனவுகினவுகண்டாயா?
ஹேமா, நீங்களே படிச்சுப் பாருங்க
உங்க வலைத்தளங்களில் நான்
கலையிடம் உங்க அண்ணணத்தான் .......
என்று ஏதாவது எழுதி இருக்கிறேனா?
நான் சிவனேயென்று ஒரு வம்புதும்புக்குப்
போகாம அமைதியாக இருக்கிறேன்
நான் ரொம்ப,ரொம்ப சாது,எதற்கும்
பயம் வேற... என்னைப்போய்.....
நான் போய்... இப்படியெல்லாம் கேட்டிருப்பேனென
நம்புகிறாயா ஹேமா?
இந்த எந்த விசயமும் எனக்குத் தெரியவே,தெரியாது
ஹேமு. இப்பயாவது சின்னப்புள்ள கலையென்று
நம்புகிறாயா?
கலை, அண்ணி,அண்ணியென்று சொல்லச்சொல்ல..
அதை எண்ணி எண்ணி என் ப்பிரானே
போகுது...பயத்தில....எவ்வ்வ்வவ்வவ்வளவு
பெரியவேலையை எங்கிட்ட ஒப்படைக்கப் பாக்காறா!
எதற்கும் அடிபோட்டு அதட்டிவை ஹேமா.

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!

Yoga.S. said...

காலை வணக்கம்,மருமகளே&கலா&துஷி மற்றும் எல்லோருக்கும்!

Yoga.S. said...

கலா(பாட்டிம்மா).....................ஹும்!!!!!மருமவ பாவம்,"வெள்ளாந்தி" விட்டு விடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S. said...

தம்பி துஷி!அக்கா முடிந்தால் சந்திப்பா என்று நினைக்கிறேன்.பிறகு....................அடுத்த டும்,டும் உங்களுக்குத் தானே என்று பிஸியாயிட்டீங்க போல,ஹ!ஹ!ஹா!!

Anonymous said...

கட்டிக்கிட்டா என் அண்ணனை தான் கட்டிப்பேன் ன்னு ஒத்தக் காலில் நின்நீங்க ..இப்போ நான் கனவு கான்றேனா ..

பொண்ணுப் பாக்க வாங்கோன்னு சொல்லிட்டு இஞ்ச வந்து ஒண்ணுமே தெரியதப் புள்ளையாட்டம் சீனு ....


இதுக்குலாம் பயப்படமாட்டோம் ...என் அண்ணானை உசுப்பேத்தி விட்டீங்க ..அண்ணன் உங்களைத் தான் கட்டிபென்னு நிக்குறார் ...


அடுத்த வாரம் பொண்ணுப் பார்க்க வாரம் சொல்லிட்டேன் ..

வாலு வாயாடித் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு அடக்க கொடுக்கம இருக்கப் பாருங்க

Anonymous said...

காலை வணக்கம் மாமா ..அக்கா அண்ணா

ஹேமா said...

ஆகா...இங்க என்ன நடக்குது !

கலைக்கு ஒரு அண்ணியும் கிடைச்சிட்டாவோ.கலா அவவின்ர வேகத்துக்கும் குறும்போ உண்மையோ எதுக்கும் நான் தாங்கமாட்டேன்.நீங்கதான் சரி.நானே அப்பாவுக்குப் பின்னால என்னைக் காத்துக்கொள்ளத்தான் கருக்குமட்டை வச்சுக்கொண்டு நிக்கிறன்.அவ நினைக்கிறா நான் கருக்குமட்டையால அடிப்பனெண்டு.நானே முடியாம அப்பாஆஆஆஆஆ,அதிராஆஆஆஆ எண்டு சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறன்.நீங்களாச்சு உங்கட “மச்சாள்”ஆச்சு !

K said...

இன்றுதான் பதிவை முழுமையாகப் படித்தேன் ஹேமா! மிக அருமையா எழுதியிருக்கீங்க! அன்பு வைத்துப் பழகுவதற்கு, நேரே சந்தித்துதான் பழக வேண்டும் என்றில்லை! இணையத்தில் முகம் பார்த்துப் பழகுவதாலும் கூட நல்ல அன்பினைப் பரிமாறக் கொள்ள இயலும்!

கலையின் அன்பு என்றுமே வியப்புக்குரியதுதான் :-)))

Yoga.S. said...

இரவு வணக்கம்,மகளே!!!

ஹேமா said...

அப்பா...வணக்கம்.சுகம்தானே.கலையும் சுகமா இருப்பா.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.நேசன் கவலையா இருக்கிறார்போல.ஆறுதல் சொல்லுங்கோ !

Yoga.S. said...

நான் சுகம்,மகளே!காலையில் போயிருந்தேன்.முடிந்த வரை சொல்லியிருக்கிறேன்.திடீரென்று பார்த்தால் ரெவரியும் வந்து போயிருக்கிறார்,அங்கு!நேசனுக்குக் கவலையெல்லாம் தெரிந்திருந்தும் சொல்லாமல் விட்டார்களே என்பது கூட!

Yoga.S. said...

நேசன் முகம் தொலைத்திருக்கிறார்,மகளே!!!

Anonymous said...

ஹயோடா....நாத்தனாரே{மச்சாள்}
என் அன்பு நாத்தனாரே
இம்புட்டு ஒரு நாத்தனாரு கிடைக்கதான்
நான் இவ்வ்வ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வ
ளவு {சத்த இருபுள்ள மூக்குக்கண்ணாடி வழுகிடிச்சி
காதுக்கு மாட்டுறமிசினையும் மாட்டிக்இட்டு வாறன்...}
வருசமாய் காத்திருந்தேனாக்கும்!
என்தங்க கொழுந்தியாரே! சீக்கரம்....பொண்ணு....சேச்சே..
பொண்ணேதான்.
பாக்க வாங்கோன்னா.........
கலா_ஏய்.....! இங்க வா! நான் சொல்லுவதைக் கேட்கனும்
கலை_சரிங்கண்ணி
கலா_ கவனமாகக் கேட்டுகனும்
கலை_கைகட்டி வாய்பொத்தி சரிங்கண்ணி
கலா_ காக்கா தூக்கிப்போன வடைமாதிரி.....
இதைத் தூக்கிக் கொண்டுபோய் கோண்டாவில்
சந்தியில் போடக்கூடாது என்ன!புரிந்ததா?
யாரு என்ன,ஏது என்று கேட்டாலும்...தெரியாதுங்க
,தெரியாதுங்க என்றுமட்டுந்தான் பதில் வரணும்..ஓகே!
கலை_ அண்ணி உங்கபேச்சைத் தட்டவே மாட்டேனுங்க...
கலா_ ம்ம்ம்ம... அதே!

Anonymous said...

அக்கா நானும் சுகமே ...நீங்கள் சுகமா ...


இன்னைக்கு சீக்கிரம் வந்து வீடிங்கள் அக்கா ..மகிழ்ச்சி ...

அங்கு ரீ ரீ அண்ணா தாஆஆன் அமைதியா ......எனக்கு என்ன பேசுரதுன்னேத் தெரியல

ஸ்ரீராம். said...

அன்பை உணர்ந்து, அன்பைப் பகிரும்போது அந்த அன்பு உலகம் முழுதும் பரவுகிறது. ஒருவரின் பல, பலவீனங்களோடுதான் அவருடனான நட்பு தொடர வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடான விஷயம். எத்தனசியோ கோப தருணங்களை ஒரு அன்பான, அக்கறையான வார்த்தை மாற்றி விடுகிறது என்பதும் ஏன் அனுபவம்!

ஸ்ரீராம். said...

உங்கள் நட்பு வட்டத்தில் சொல்லியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். முதல் பின்னூட்டத்தில் எத்தனையோ என்பதற்கு பதில் 'எத்தனசியோ' என்று 'டைப்'பி விட்டேன் மன்னிக்கவும்! :))

கலா said...

.அவ நினைக்கிறா நான் கருக்குமட்டையால அடிப்பனெண்டு.நானே முடியாம அப்பாஆஆஆஆஆ,அதிராஆஆஆஆ எண்டு சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறன்.!\\\\\\

ஹேமா, அவவுக்குப் பயந்தகாலமெல்லாம்...
போயேபோயிடுச்சி இனிமேல் நான்
இருக்கிறேன் ஓளியவேண்டாம்...
அந்தகை கையை பயற்றங்காய் உடைப்பதுபோல்..உடைச்சிப் போட்டிடமாட்டன்...அதற்கும் அடங்கவில்லையென்றால்...
என்னோட டாலிங்கிட்டச் சொல்லி ஒரு
மூக்கணாங் கயிறு சீக்கரத்தில பாத்துக்
கட்டி நாடு கடத்திவிடுங்கோ என்று
தலையணைமந்திரம் போட்டுவிடுவேன்
அதனால...ஹேமா பயமே வேண்டாம்

கலா said...

கோப தருணங்களை ஒரு அன்பான, அக்கறையான வார்த்தை மாற்றி விடுகிறது என்பதும் ஏன் அனுபவம்!\\\\
ஐய்யனே! ஓஓஓ..அப்படியா?
ஆமா,அடிக்கடி எழத்துப் பிழையாகும் போது நினைத்தேன்,
எண்ணமெல்லாம் எங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போகுதென்று!
ஆமா, அந்த அக்கறையான,அன்பான...???

ஸ்ரீராம். said...

//ஆமா,அடிக்கடி எழத்துப் பிழையாகும் போது நினைத்தேன்,//

ஆமாம் இது என் தவறுதான்... வேகமாகப் பின்னூட்டம் 'டைப்'பி திரும்ப அதைப் படித்துப் பார்க்காமல், திருத்தாமல் 'பப்ளிஷ்' கொடுத்து விட்டு ஓடி விடுகிறேன். இனி கவனமாக இருக்க முயற்சி செய்கிறேன்! :))

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!

Yoga.S. said...

காலை வணக்கம்,மருமகளே&கலா&துஷி மற்றும் எல்லோருக்கும்!

கலா said...

இனி கவனமாக இருக்க முயற்சி செய்கிறேன்! :))\\\
அப்படி ,இப்படி ஏதும் எழுதும்போது கசியாமலா?
என்னங்க...நாசுக்காக...இப்படிச் சொல்லிப்போட்டு ஓடிப்போனால்...
விடுவேனா?நான் கேட்டதற்கெல்லாம்
சரியாகப் பதிலைக் காணோமே!
இது பரீட்சை தெரியுமில்ல...?அப்புறம் அப்புறம் ஒண்ணாங்கிளாஸிலே
வைத்துவிடுவேன்.

Anonymous said...

மாமா, அக்கா ரீ ரீ அண்ணா பதிவு போட்டு இருக்கங்கள்

Anonymous said...

என்னோட டாலிங்கிட்டச் சொல்லி ஒரு
மூக்கணாங் கயிறு சீக்கரத்தில பாத்துக்
கட்டி நாடு கடத்திவிடுங்கோ என்று
தலையணைமந்திரம் போட்டுவிடுவேன்
அதனால...ஹேமா பயமே வேண்டாம்///////


அஆருக்கு இப்பம் முக்கனாங் கயிறு போடணும் அண்ணி ...

உங்கட டார்லிங் ஆரு ....எனக்கு ஒண்ணுமே புரியலையே ...அம்மா டீஈஈஈஈஇ ...

கலா அண்ணி நீங்கள் எனக்கு தான் மாப்பிளை பார்கீன்களா ...அயயோஓ ...வ்வானம் அண்ணி ...எனக்கு ரொம்ப வெட்க வெட்கமா வருது ...முதலில் உங்களுக்கும் அண்ணனுக்கும் நல்ல படியா கல்யாணம் முடியட்டும் அப்புறமா நான் நீங்க பார்க்குற பையனை கட்டிக்கிறேன் ....

Unknown said...

ஹேமா அக்கா வாழ்த்துகள் கலை எனக்கும் கொடுத்திருந்தார்...

தனிமரம் said...

கலைக்கு நல்ல ஒரு நாத்தனார் கலா பாட்டியம்மா சூப்பரா இருக்கு ஹேமா கலையிடம் மாட்டிக்கிட்டா கலா பாட்டி:))))

தனிமரம் said...

அண்ணியாக வந்து கலையின் கையை உடைக்க இருக்கும் கலா பாட்டியம்மாவுக்கு கருக்குமட்டை கொண்டு வருவான் கலையின் அண்ணா தனிமரம்(ஹீ ஹீ நீங்க கறுப்பட்டி வாங்கின பாட்டி தான் நம்பிவிட்டேன்)

கலா said...

இருக்கு ஹேமா கலையிடம் மாட்டிக்கிட்டா கலா பாட்டி:))))
என்னங்க புரியாமப் பேசுறீங்க...
நானா?நானா?மாட்டிகிறதாவது!
நல்லாப் மடிச்சுப் பாருங்கோ..
கலைதான் எங்கிட்ட மாட்டிக்கிட்டு
முழியோமுழியென முழிக்கிறா.....
கொஞ்சம் ஆறுதலாகப் பேசுங்க கலையிடம் பாவம் புழச்சிப்போகட்டும்..

கலா said...

அண்ணியாக வந்து கலையின் கையை உடைக்க இருக்கும் கலா பாட்டியம்மாவுக்கு கருக்குமட்டை கொண்டு வருவான் கலையின் அண்ணா தனிமரம்(ஹீ ஹீ நீங்க கறுப்பட்டி வாங்கின பாட்டி தான் நம்பிவிட்டேன்)\\\\\\\

ரொம்பதான் என்தங்கை உங்களை
வாயாடுறாள கொஞ்சம் இப்பவே..
அடைக்கி வைடா தங்கம் என்று
சொன்னதே என்,..என்..மாமாதான்!
அந்த மவராசனுக்குப்போய்... இது..தங்கையாய் ......பொறுத்துப்
பாப்பேன் அடங்கவில்லையென்றால்..
அந்தக் கறுப்புப்பட்டிதான் கலையிடம்
பேசும்.

கலா said...

கலையின் அண்ணா தனிமரம்(ஹீ ஹீ நீங்க கறுப்பட்டி வாங்கின பாட்டி தான் நம்பிவிட்டேன்)\\\\\\
ஐய்யோ மன்னிக்கனும்.. அது நீங்கதானா?
வாங்க..வாங்க..குடிக்க ஏதாவது கொடுக்கட்டுமா?சாப்பாடுபோடட்டுமா?உக்காருங்க..நின்னுபேசினா என் மனசு வலிக்கும்.
ரொம்பப் பாக்காதங்க...எனக்கு...................

Anonymous said...

அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ நல்ல சுகமா ...

நான் நல்ல சுப்பேரா இருக்கேன் ,,,மனசில் இருந்த பாரமெல்லாம் கரைச்சிப் போச்சி உங்கட வார்த்தகள் மாமாவின் அண்ணாவின் எண்ணங்கள் .....

ரொம்ப சந்தோசமா இருக்கேன் அண்ணா உங்களை எல்லாம் நினைச்சி ...


கடைசி வரைக்கும் உங்கள் அன்பு எனக்கு வேணும ...

VijiParthiban said...

மிகவும் அருமை ஹேமா அவர்களே வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

ஹேமா உப்புமடச் சந்தியில் நான் படித்த பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது. நல்லதொரு விடயத்தை சொல்லியிருக்கிறியள்.
//அவரவருக்கான பலமும் பலகீனங்களோடும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்க ஏன் தவறிவிடுகிறோம்.நம்மிலும் நம்மோடு இருப்பவர்களிடமும் ரசிக்கத்தக்க எத்தனையோ விஷயங்களைக் கவனிக்கத்தவறி வெறுமனே கடந்துபோய்க்கொண்டிருப்பதா வாழ்வு....!//

உங்களது இந்த வரிகளை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் எம்மைச் சுற்றிலும் இனியதொரு உலகத்தைப் படைக்கமுடியும்.

அம்பலத்தார் said...

Hema, you are realy great.

ஜோதிஜி said...

நலமாஹேமா?

COME TO SEX WORLD said...

Your Site Very Helpfully Information Site .
Like This
Thanks for Information
Thanks,Thanks,Thanks


»------------1.» 2014 koyell mollik New Sex video Collections

»------------1.» 2014 New xnxx Collections

»------------1.» 2014 New xnxx movie Collections

»------------1.» 2014 New indian Sex Collections

»------------1.» 2014 New tamil Sex Collections

»------------1.» 2013 New bangla Sex Collections

»------------1.» 2014 Newkristina akheeva Sex Collections

»------------1.» 2014 New katrina kaif Sex Collections

»------------1.» 2014 New GAY UA Sex Collections

»------------1.» 2014 New PORN TUB Sex Collections


»------------1.» 2014 New Gay Sex Collections

MANO நாஞ்சில் மனோ said...

கல் கனமும் மண் பாரமுமாம் மூடனுடைய கடுஞ் சொற்களோ அதிலும் பாரமாம் என்று பைபிளில் ஒரு வசனம் உண்டு !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP