Sunday, February 19, 2012

இனிப் பயமில்லாம தண்ணியடிக்கலாம் !

நல்லாத் தண்ணியடிக்கிற ஆட்களுக்குத்தான் இந்தப் பதிவு....பாருங்கோ எப்பிடியெல்லாம் யோசிக்கினம்.ஆனாலும் சூப்பரான யோசனை.நல்லாத் தண்ணியடிச்சிட்டு முதுகு குப்பற விழுந்து கிடந்தாலே போதும்.யாரென்றாலும் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டிருவாங்கள்.ஆனால் மறக்காம டீசேர்ட் வாங்கின உடன உங்கட விலாசததை எழுதி வச்சிடுங்கோ மக்களே !

ஆடை உற்பத்தி செய்யும் கம்பனி ஒன்று வித்தியாசமாகச் சிந்தித்ததன் விளைவே இதுவாகும்...ஒருதரம் "ஓ" போட்டு நன்றி சொல்லி வையுங்கோ தண்ணி அடிக்கும் மகான்களே (மகானிகளே) !

இது சத்தியமான உண்மை.அளவுக்கு அதிகமாக தண்ணி அடிச்சிட்டு தெருவழியக் கிடக்கிற அவர்களின் குடும்ப நலன் கருதி வீடு போய்ச் சேரும் நோக்கில் சிறப்பாகத் தயாரிச்ச டீசேர்ட் இதுவாம்...!

அந்த ஆடையில் குறித்த நபரின் பெயர் மற்றும் அவரின் வசிப்பிட முகவரி என்பன குறிப்பிடப்பட்டிருக்கும்...!

அதில் ஒரு குறிப்பு உள்ளது.. "நான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தால் கீழ்க்கண்ட விலாசத்தில் என்னைச் சேர்ப்பிக்கவும்"

ஆடை தயாரிப்பு கம்பனிகள் என்ன விவரமா இருக்கிறாங்கள் என்று பாருங்களேன்.எல்லாம் வியாபார நோக்கம் என்றாலும் நல்லதும் நடக்குதுங்கோ...!!!!

இனிக் கள்ளுக்கடையிலேயே டீசேர்ட்டும் கிடைக்குமாம்...!

34 comments:

சாந்தி மாரியப்பன் said...

நானும் 'ஓ' போட்டுக்கறேன் :-)

இராகவன் நைஜிரியா said...

:-))

வித்யாசமான சிந்தனை... வியாபர தந்திரம்.

துரைடேனியல் said...

Namma oorukku eppa varum Sago.? (hi...hi...Naan romba Nalla paiyanunko)

துரைடேனியல் said...

TM 1.

பால கணேஷ் said...

என்ன ஃப்ரண்ட் இது? ஏற்கனவே தமிழ்நாட்டு அரசாங்கம் தெருவுக்குத் தெரு கடை தொறந்ததுல எல்லா ஜனங்களும் தலைகால் புரியாம குடிக்கிணம். இப்டி வேற ஒரு வசதி இருக்கென்டு தெரிஞ்சிட்டால் என்னாகறது? யப்பா... (ஆனா நான் குடிக்கறதில்லப்பா... நெசம்மா...)

ராமலக்ஷ்மி said...

நல்ல சிந்தனைதான் ஹேமா:))!

போதையில் தள்ளாடுபவன் வானம் பார்க்க விழுந்து தொலைத்தால் பிரயோசனமின்றிப் போகுமே. இரண்டு பக்கமும் குறிப்பெழுதிய சட்டையாக இருந்தால் நல்லது:)!

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
எனக்கு தேவையில்லாத பதிவு தான்!
அவ்வ்வ்வ்வ்வ்
இப்பவாச்சும் நான் நல்லவன் என்று சொல்ல ஓர் சான்ஸ் கிடைச்சுதே! அவ்வ்வ்வ்வ்வ்

புதிய ஆடை பற்றி அறிந்தேன்! ஹே...ஹே...

கூடல் பாலா said...

உடனடியா பத்து டி ஷர்ட் பார்சல் ........

தமிழ் உதயம் said...

தமிழகத்துக்கு தேவையான டி-சர்ட்.

காட்டான் said...

வணக்கம் சகோதரி!
எனக்கும் தேவையில்லாததுதான்.. ஹி ஹி நான் வெளியால உந்த வேலை செய்யுறதில்ல வீட்டில மட்டும்தான்;-))

Unknown said...

இதுக்கு எங்க ஓர்டர் பண்ண வேணும்?

மகேந்திரன் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....

சுதா SJ said...

நானும் என் காட்டான் மாம்ஸுக்கு ஒரு நாலு ஓடர் பண்ணலாம் என்று இருக்கேன்.... தகவல் சொன்னதுக்கு தேங்க்ஸ் அக்காச்சி lol

KANA VARO said...

பயபுள்ளைங்க. எப்பிடியெல்லாம் திங் பண்ணுதுகள்..

தனிமரம் said...

உண்மையில் நல்ல ஜோசனைதான்.

சாந்தி மாரியப்பன் said...

@ ராமலஷ்மி,...

ஆளைப் புரட்டிப் போட்டு அட்ரஸைக் கண்டு பிடிக்கலாம்
:-))

நிலாமதி said...

உலகம் எப்படி எல்லாம் முன்னேறுகிறது

Seeni said...

ada kodumaiye!

Yaathoramani.blogspot.com said...

அப்பப்பா ... தீயவைகளுக்கு ஆதரவாக
எவ்வளவு நல்ல யோசிக்குறாங்க

விச்சு said...

டீ சர்ட் நல்ல ஐடியா... அப்படியே கொரியர் சர்வீசும் நடடத்துனா சூப்பராயிருக்கும். டாஸ்மாக்'கோட ஒப்பந்தம் போட்டுக்கலாம். ஒரு சந்தேகம் ஹேமா தண்ணி அடிக்குறதுனா என்ன?

Unknown said...

நான் அந்த அளவுக்கு மோசம் இல்லையாக்கும்:)))

சி.பி.செந்தில்குமார் said...

haa haa wat an idea to hema to post a post.. avvvv

கவி அழகன் said...

O

ஹுஸைனம்மா said...

எப்பிடிலாம் யோசிக்கிறாங்கன்னு நெனச்சுகிட்டே வந்தா...

//ராமலக்ஷ்மி said...
... இரண்டு பக்கமும் குறிப்பெழுதிய சட்டையாக இருந்தால் நல்லது:)!//

அவ்வ்வ்.... :-)))))))))))))

தமிழ்நாட்டு கெவுர்மெண்டு ஹோல்சேலா ஆர்டர் பண்ணாலும் பண்ணுவாங்கன்னு அவிங்ககிட்டச் சொல்லிவைங்க!! :-))))))))

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹேமா...

சில ஆண்டுகளுக்கு பின் இந்த கமெண்ட்... சரி உடனே ஆர்டர் கொடுத்திடுறேன்...

ராஜ நடராஜன் said...

ஹேமா! இந்தப் பின்னூட்டம் நேற்றே போட வேண்டியது.இன்னொரு கணினியில் உட்கார்ந்துகிட்டிருந்ததால
என்னோட கணினிக்கு கோபம்.

மகானிகளே!இது வரைக்கும் இந்த சொற்பதத்தை பார்த்ததேயில்லை:)தமிழ் அகராதியில் சேர்த்துடலாம்.

அம்பலத்தார் said...

ஆமா அப்புறம் என்ன இனி சட்டையை வாங்கி மாட்டிட்டு இஸ்டம்போல ஏத்திக்குங்க என்று சொல்லுறாங்க.

ஸ்ரீராம். said...

நல்ல யோசனைதான். சம்பந்தமில்லாத ஒரு தகவல்...தமிழ்நாட்டில் இப்போது ஒரு தம்பதியர் கவுண்டமணியின் சில புகழ்பெற்ற வசனங்களைப் போட்டு டீ ஷர்ட் தயாரித்து விற்கின்றனர். உதாரணம்..."பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா"

Anonymous said...

நமக்கு 'புல்' சைஸ் டி ஷர்ட்...-:)

Marc said...

அட எங்க விக்குதுனு சொல்லுங்கப்பா!!

ராஜி said...

டி சர்ட் கடைக்காரனை விட உங்களுக்குதான் சமர்த்து ஜாஸ்தின்னு நினைக்குறேன். ஒரு டிசர் வச்சு ஒரு பதிவை தேத்திட்டிங்களே சபாஷ்

அப்பாதுரை said...

ஹிஹி.. எங்கே கிடைக்குது?
'தெருவழிய' கிடக்கும் போது கவனமா குப்புற விழணும்.. ரைட்.

ஹேமா said...

சாரல்...வாங்கோ.இவ்ளோ நல்ல விஷயம் சொல்லியிருக்கிறன்.ஓ போடாட்டி எப்பூடி !

இராகவன் நைஜீரியா...வாங்கோ வாங்கோ.சுகமா இருக்கீங்களா.இப்போ பதிவு எழுதுறதில்லையா.சந்தோஷமாயிருக்கு உங்களைக் கண்டது.என் பதிவுகளைக் கவனிக்கிறீங்கன்னு தெரியுது !

டேனியல்...நீங்க நல்ல பையன்னு சொல்லிகிட்டு யாருக்காக விசாரிக்கிறீங்க.ஆளைப் பாருங்க.இப்பத்தானே இங்க வந்திருக்கு.நம்ம நாடுகளுக்கு வந்திடும் சீக்கிரமா !

கணேஸ்...ஃப்ரெண்ட் அப்போ நம்ம நாடுகளுக்கு இந்த டீசேர்ட் வந்தால் இன்னும் சிக்கல்ன்னு சொல்றீங்க.
யோசிக்க வைக்கிறீங்களே !

ராமலஷ்மி....அக்கா அந்தக் கம்பெனிக்கு அறிவிக்கணும் உங்க ஐடியாவை.அதானே இரண்டு பக்கமும் வாசகங்கள் இருக்கணுமே.நிமிர்ந்து படுத்துக்கிட்டா என்னா பண்றதாம் !

நிரூ...நீங்க ரொம்ப நல்லவன் வல்லவன்ன்னு எல்லாருக்கும் தெரியுமே.பிறகெதுக்கு இந்த டீசேர்ட் !

பாலா...பத்து டீசேர்ட்டா...போதுமாய்யா !

தமிழ்...கணேஸ் வேணாம்ங்கிறார்.நீங்க வேணும்ன்னு சொல்றீங்க.கம்பெனிக்கு இப்போ குழப்பம் !

காட்டான்...ஓ...வீட்ல மட்டும்தானா.அப்போ வேணாம் வேணாம்.நல்லபிள்ளைகளுக்குத் தேவையில்லை !

ஹாலுவுட்ரசிகன்...வாங்க ராசா.என்னா ஒரு ஆர்வம்.அதான் இந்தப் பதிவில அந்தக் கம்பெனி பேரைப் போடாம விட்டிருக்காங்க !

மகி...வியாபரத் தந்திரம்.யார் எக்கேடு பட்டுப்போனா என்ன.நல்லாவே யோசிப்பாங்க காசு வரும்ன்னா !

துஷியா...உதை விழும் சொல்லிட்டேன்.காட்டான் மாமாவே வேணாம் எண்டு சொல்லிட்டார் !

வரோ...வெளிநாடுகளில இப்படித் தண்ணியடிச்சிட்டு தலைகீழாய் நடக்கிறது எப்பவாச்சும்தான்.அதனால அவங்கள் யோசிக்கிறது பரவால்ல !

தனிமரம்...நேசன் நல்ல யோசனையோ.வீட்டு போன் நம்பரைத் தாங்கோ.இதை அப்பிடியே சொல்லி வைக்கீறேன் !

நிலாமதி...அதானே.ஆனா நல்ல விஷயத்தில ஏறினா நல்லதுதான்.ஒருவேளை இதுவும் ஒருபக்கத்துக்கு நல்லதோ !

சீனி...எதைக் கொடுமைன்னு சொல்றீங்க.நீங்க ரொம்ப நல்லவராக்கும் !

ரமணி...ஐயா அவங்க அவங்களுக்கு அவங்க செய்றது சரிதானே.இதையும் நியாயமாக்குவாங்க !

விச்சு..பாவம் நீங்க.தண்ணியடிக்கிறதுன்னா தெரியாம இருக்கீங்கன்னு சொல்றது பெரிய பரிதாபம்.பிறகெதுக்கு உங்களுக்கு டீசேர்ட்,கொரியர்.விடுங்க வேணாம் !

செந்தில்...கொஞ்சம் சிரிக்க வைச்சேனா !

கவி அழகன்...என்ன ஓ...டீசேர்ட் திட்டம் வேணுமா வேணாமா !

ஹூசைனம்மா...நல்ல திட்டமெல்லாம் சொல்றீங்கப்பா !

விக்னேஸ்வரன்...விக்கி எப்பிடி இருக்கீங்க.பாருங்க எவ்ளோ நல்ல கவிதைகள்,பதிவுகள் போட்டும் இந்தப் பதிவு உங்களை இழுத்திருக்கே !

நடா...உண்மையில் எனக்குத் தெரில.மகான்ன்னா மகானிதானே.சிரிக்காதீங்க !

அம்பலத்தார்...ஓட்டு எடுக்கிறாங்க.இந்த டீசேர்ட் தேவையான்னு.உங்க ஓட்டையும் சேர்த்துக்கலாம் !

ஸ்ரீராம்...சில வாசகங்கள் வியாபாரங்களை உயர்த்தியிருக்குத்தானே !

ரெவரி...புல் சைஸ்.அப்போ நல்ல விஷயம்தான்னு சொல்றீங்க !

சேகரன்...தம்பின்னு நல்ல மரியாதை வச்சிருக்கேன் உங்ககிட்ட.உங்க கேள்வி சரில்ல !

ராஜி...எனக்கும் கொஞ்சம் மூளை இருக்குன்னு சொல்றீங்க.சந்தோஷம்ப்பா !

அப்பாஜி...ராமலஷ்மி அக்கா கேட்டுக்கிட்ட மாதிரி ரெண்டு பக்கமும் எழுதச் சொல்லலாம்.தெருவழிய இல்ல எங்க கிடந்தாலும் வீட்டுக்கு
போய்டலாமெல்லோ !

sury siva said...

அண்மையில் விருகம்பாக்கம் அருகில் வந்துகொண்டிருந்தபொழுது
ரோடு ட்ராஃபிக் ஜாம். என்ன வென்று ஆடோகாரரிடம் கேட்டேன்.
குடித்து விட்டு வந்த ஒருவன் பைக்கிலிருந்து கீழே விழுந்து இன்னமும்
போதை தெளியாமல் இருக்கிறான். அவனை அங்கிருந்து அப்புறப்படுத்துக்
கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.

ஆடோ அவன் விழுந்து கிடந்த இடத்தில் சென்ற பொழுது நல்ல டீக்காக‌
அவன் டிரஸ் செய்திருந்தான். யார் பெத்த புள்ளையோ என்று நினைத்தேன்.

ஜீ தமிழ் டி.வி. யில் திருமதி நிர்மலா பெரியசாமி அவர்கள் நடத்தும்
சொல்வதெல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சியைப் பாருங்கள்.

தமிழ்கத்தில் குடித்து, தன்னையும் தன்னை நம்பி வந்த மனைவி மக்களையும்
சித்திரவதை செய்யும் குடி மக்கள் ஏராளம் ஏராளம். இதில் பலர் தாம் ஏன்
குடிக்கிறோம் என ஒரு நியாயத்தையும் சொல்வது விசித்திரமாக இருக்கிறது.

கடைசியில் உங்கள் பதிவின் விளம்பரம் தமிழ் நாடு அரசு டாஸ்மாக் நிறுவனங்கள்
பார்வைக்குச் சென்றால் என்ன நடக்கலாம் என கற்பனை செய்து பார்த்தேன்.

விற்பனையை அதிகரிக்க, ஐந்து குவார்ட்டர் மொத்தமாக வாங்கினால்
இது மாதிரி ஒரு ஷ்ர்ட் இனாம் ( buy 5 get one shirt free ) என்று விளம்பரம்
போடலாம்.

அந்த சர்ட்டின் கீழே படிக்க முடியாத சிறிய எழுத்துக்களில் " குடி குடியைக் கெடுக்கும்"
என்றும் எழுதலாம்.

சுப்பு தாத்தா.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP