Thursday, July 22, 2010

கேள்விகளும் அர்த்தங்களும்.

அட கடவுளே ! இப்படியுமா அர்த்தங்கள்
இருக்க முடியும் ?இத்தனை வயசு
வரைக்கும் தெரிஞ்சிக்கமலே பாழ் பண்ணிட்டேனே!
ஹும்!!! இனிமே புலம்பி என்னா பண்ணறது?

“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம்.ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க முடியாது”ன்னு சொல்லுவாங்க.அது ஓரளவுக்கு உண்மைதாங்க.அவங்க என்ன நினைக்குறாங்களோ அதைச் சூசகமா வார்த்தைகள்'ல வெளிப்படுத்துவாங்க.ஆனா நம்மளாலதான் அதை புரிஞ்சுக்க முடியறது இல்லை. உதாரணத்துக்கு அவங்க சூசகமா சொல்லக்கூடியா வார்த்தைகளையும் அதுக்குப் பின்னணியில இருக்கிற “உண்மையான”அர்த்தத்தையும் இப்போ நாம பார்க்கலாம்.

1)உங்களுக்கு என்ன பிடிக்கும்?

இந்தக் கேள்வியை அவங்க கேட்டாங்கன்னா உடனே நாம வரிஞ்சுகட்டிக்கிட்டு நமக்கு பிடிச்சதை எல்லாம் ஒப்பிப்போம்.ஆனா இந்தக்கேள்விக்குப் பின்னாடி இருக்கிற அர்த்தம் என்ன தெரியுமா?

உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது !

2)அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கா இல்ல ?

அப்படின்னு எதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திட்டு சொன்னா உடனே நாம் அந்த பொண்ணோட அழகைப்பத்திதான் யோசிப்போம்.ஆனா அவங்க நம்மகிட்ட சொல்லவர்றது என்னன்னா

அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா !

3)இண்ணைக்கு என்ன சமையல் பண்ணட்டும் ?

இந்தக் கேள்வியைக் கேட்டுட்டா அடடா நமம பொண்டாட்டி நம்மகிட்ட கேட்டுகிட்டுத்தான் சமையலே செய்யுறாளே அப்படின்னு நீங்க புளங்காகிதம் அடையக்கூடாது.

டேய்! இன்னைக்கு உன்னைக் கேட்டுதான் சமைக்குறேன்.மிச்சமாச்சுன்னா என்னால நாய்'க்கு எல்லாம் துக்கிப்போட முடியாது.எல்லாத்தையும் நீதான் சாப்பிட்டு தொலைக்கணும் !

4 )உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க ?

இந்த கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா ?

உங்க பிரண்ட்ஸுங்கன்னு சொல்லி ஒருத்தன் கூட வீட்டுக்கு வரக்கூடாது.உனக்கு வடிச்சுக் கொட்டுறதே தண்டம்.இதுல அவனுங்களுக்கு வேற என்னால் வடிச்சு கொட்ட முடியாது !

5)என்னமோ பண்ணுங்கன்னு சொல்லுவாங்க சிலநேரம் !

பரவாயில்லை நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாளே ன்னு நீங்க யோசிச்சீங்கன்னா உங்களை விட இளிச்சவாயன் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது.

நீயெல்லாம் திருந்தவே மாட்டே.எனக்கு இது பிடிக்கலை.இதுக்கு மீறி எதாவது செஞ்சேன்னா மவனே தொலைச்சு கட்டிடுவேன் !

6)எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்குறேன்ன்னு சொன்னா !

இந்த வார்த்தைய சொன்ன உடனே உங்களுக்கு உச்சி குளிர்ந்திடுமே.அப்படியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா யோசிக்கக்கூடாது.இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

எப்ப பார்த்தாலும் தண்டத்துக்கு ஊர் சுத்திகிட்டு இருக்குறதே உனக்கு பொழப்பா இருக்கு.இதுல குடும்பத்தை எங்கே கவனிச்சுக்க போறே?மொதல்ல சம்பளக்கவரை என் கையில கொடு !

7)நம்ம பையன் ஸ்கூல்'ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம் !

அக்கறையா நம்ம கூப்பிடுறாங்கன்னு நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது.இந்த வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம்.ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?.நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு.அப்பத் தெரியும்.

8)இந்த ஃபோன்'ல சரியாவே சிக்னலே கிடைக்கமாட்டேங்குது !


இந்த வார்த்தையை சொன்ன உடனே ஏதாவது நெட் வொர்க் பிராப்ளமா இருக்கும்ன்னு நீங்க சொல்லுவீங்க.ஆனா அவங்க என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா ?

நட்டு கழண்டவனே! நீ மட்டும் ஸ்டைலா ஃபோன் வாங்கி வெச்சிருக்கே.எனக்கு மட்டும் செகண்ட் ஹாண்ட்'ல அதுவும் இத்துப்போன மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கே.மொதல்ல இதை மாத்திட்டு Iphone வாங்கிக்கொடு !

9)இந்த நகைபோட்டா கழுத்துல ஒரே அரிப்பா இருக்குன்னு சொன்னா !


அப்படின்னா உடனே கழட்டி வெச்சிடுன்னு நீங்க சொல்லக்கூடாது !

கவரிங்'ல வாங்கிக்கொடுத்தா இப்படித்தான் இருக்கும்.நகை வாங்கிக்கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு? மொதல்ல ஒரு நகைக்கடைக்கு கூட்டிட்டு போய் 916 ஹால்மார்க் நகையா வாங்கிக்கொடு !

10)எவ்ளோ வேலைதாங்க நீங்க செய்யுவீங்க ?

உடனே நம்ம மேல எவ்ளோ பரிதாபப்படுறாங்க'ன்னு நீங்களா ஒரு செண்டிமெண்ட் உருவாக்கிக்காதீங்க.

அட அறிவுகெட்டவனே...உன் வேலையுண்டு வீடு உண்டுன்னு வந்து சேர வேண்டியதுதானே.கண்டவன் பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிட்டு ஓவரா சீன் போடுற...அப்படிங்கிறதைத்தான் அவங்க சொல்லாம சொல்றாங்க.

11)ஏங்க! இந்த சத்யம் தியேட்டர் எங்கே இருக்கு?

நீ மட்டும் உன் ஃபிரண்ட்ஸுங்களோட போய் கண்ட படத்தையும் பார்த்திட்டு வந்திடுறே.என்னை எப்பாச்சும் அந்த தியேட்டருக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா...

அப்படின்னு உங்களை கேட்கறதுக்கு பதிலாத்தான் இந்தக் கேள்வியை அவங்க கேட்குறாங்க.

நண்பர்களே... இந்த அர்த்தத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்குக்குங்க. ஒருவேளை உங்க மனைவியோ இல்லை காதலியோ இந்த மாதிரி கேள்வியை உங்ககிட்ட கேட்டாங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரியாம நீங்க முழிக்க கூடாது இல்லை.அதுக்குத்தான் சொன்னேன்...!

நான் ஒண்ணுமே சொல்லலங்கோ.உங்க எல்லாருக்கும் சொல்லச் சொல்லி ஒரு நியூஸ் வந்திருக்கு.சொல்லிட்டேன் ஆளை விடுங்க !

எதிர்ப்பதிவு இங்கே...

42 comments:

sury siva said...

இந்த அம்பது வருசத்திலே எங்க வீட்டுக்காரி கேட்டதல்லாம்
உங்களுக்கு யாருங்க சொன்னாங்க ??

ஓண்ணு கூட விடாம எழுதியிருக்கீக !!

சுப்பு ரத்தினம்.

எல் கே said...

இதுக்கு மேலயும் நெறைய இருக்கு அப்புறமா சொல்றேன் இப்ப வரட்டா

Unknown said...

பூம் பூம் மாடு பாத்திருக்கீங்களா.. அது மாதிரி தலையாட்டும் சொரணை கெட்ட ஆளுங்க நான்....

ஸ்ரீராம். said...

எல்லா இடத்துலயும் நடக்கறதுதானே....இல்லை...? வீட்டுக்கு வீடு வாசப்படி...!

நசரேயன் said...

//நான் ஒண்ணுமே சொல்லலங்கோ.உங்க எல்லாருக்கும் சொல்லச் சொல்லி ஒரு நியூஸ் வந்திருக்கு.சொல்லிட்டேன் //

சொல்லலைனா தலை வெடிச்சிடுமுன்னு சொன்னாங்களா இல்ல ரத்த வாந்தி வருமுன்னு சொன்னாங்களா?

நசரேயன் said...

//“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம்.ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க
முடியாது”//

கண்டு பிடிச்சா என்ன நோபல் பரிசா கிடைக்கும் ?

நசரேயன் said...

//உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண
முடியாது !//

ஃபாலோயர் பட்டியல்ல இருந்து கழண்டுக்கனுமா?

நசரேயன் said...

//அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா !//

அவளுக்கு தான் புடைவை நல்லா இருக்கு, உனக்கு நல்லா இல்லைன்னு சொல்லணும் ?

நசரேயன் said...

//3)இண்ணைக்கு என்ன சமையல் பண்ணட்டும் ?//

தயவு செய்து சமையல் செய்யவேண்டாம், இன்றைக்கு ஒரு நாளாவது நான் நல்ல சாப்பிட்டு சாப்பிடுறேன்

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குனு கமென்ட் போட சொல்றா என் மனைவி. அப்படின்னா என்ன அர்த்தம் ........

ராஜவம்சம் said...

அட மடையா இது தெரியாம இத்தனை நாளா இதுமாதிரி கேள்விக்கெல்லாம் அசடு மாதிரி பதில் சொல்லியிறுக்க.

வால்பையன் said...

என்ன ஒரு ஆராய்ச்சி!

தமிழ் உதயம் said...

ரசித்து படித்தேன்.

Madumitha said...

அட்டகாசமான சேம் சைடு கோல்.

Karthick Chidambaram said...

கலக்கல் பதிவுங்க .... இது எல்லாம் தெரிஞ்சா மட்டும் நாங்க திருந்திடுவோம்னு நீங்க நெனச்சா அது .... ரொம்ப பெரிய தப்பு.

Ashok D said...

எனக்கு எப்பவும் 0 மார்க்தான் இந்த புரிதல்ல...

எனக்கு தெரிஞ்சி பெண்கள் கொஞ்சம் லூசுங்க தாங்க ஹேமா :)

நேசமித்ரன் said...

ம்ம்ம் :)

Prasanna said...

//பூம் பூம் மாடு பாத்திருக்கீங்களா..//

இந்த மாதிரி மையமா தலையாட்டியே சமாளிப்போம். யாரு நாங்க :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

முனைவர் இரா.குணசீலன் said...

உளவியல் குறிப்புகள் அருமை..

Katz said...

மனசுக்குள்ள அவ்வளவு அசிங்கமா திட்டினாலும் வெளிய எவ்வளவு பணிவா பேசறீங்க. நீங்க எவ்வளோ நல்லவங்க. ஹி ஹி.

கும்மாச்சி said...

அது சரி ஹேமா எல்லா பதிலும் சும்மா சரளமா வருது, பழக்கம் போல. பாவம் அவரு

Anonymous said...

உங்க வீட்டுக்காரரு நிலைமை நினைச்சா பாவமாத்தான் இருக்கு :)

Anonymous said...

ரசிக்கும் படியான பதிவு.
அழகான பதிவு.
அப்படினா யோசிக்க வேண்டிய விஷயம் தான். ம்ம்ம் :)

Priya said...

இவ்வளவு கேள்விகள்தானா நாம கேட்போம்...

இதுக்கு மேலேயும் இருக்குதானே ஹேமா? அதை என்னைக்கு பதிவிடப் போறீங்க:)

ஜெயா said...

ஹேமா இந்தப் பதிவுக்கு அப்புறம்
கணவன்மார்கள் எல்லோரும் உஷார்,
மனைவிமார்கள் எல்லோரும் ஜாக்கிரதை.....

தமிழ் அமுதன் said...

///உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம்.ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?.நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு.அப்பத் தெரியும்.///

அப்படியா சொல்லுரீங்க என்னமோ போங்க ...!

புள்ளய கூட்டியார எப்போ வாச்சும் ஸ்கூல் போனா அதுக்கே நெறய பதில் சொல்ல வேண்டி இருக்கு..!

ஜெய்லானி said...

என்ன ஹேமா இப்பிடி சொல்லிட்டீங்க ....!!
வாயைவே திறக்காத அப்பாவிகிட்ட எத்தனை கேள்வி கேட்டு இருக்கீங்க..

- இரவீ - said...

ஹேமா.... உங்களுக்கு பின்னூட்டத்துக்கு பதிலா ஒரு பதிவே போட்டாச்சு (இங்க).

pinkyrose said...

ஹேமாக்கா நான் இதை பத்திரமா வச்சு ஒரு ஆளுக்கு கிஃப்ட் பண்ணப்போறேன்

'பரிவை' சே.குமார் said...

அடேயப்பா.... இவ்வளவு இருக்கா கேள்விகளுக்குள்ள...

எல்லாத்துலயுமே உள்குத்து இருக்கும் போல...

ரொம்ப யோசிக்கணும் போல...

S.kumar
Http://www.vayalaan.blogspot.com

நிலாமகள் said...

ரொம்ப நல்லாயிருக்கு இந்த கலாட்டா...

நிலாமகள் said...

அதனால , எட்டி எட்டி பார்த்துட்டு போயிட்டிருந்த நானும் ஹேமா வீட்டுக்குள்ள வந்தாச்சு ! வணக்கம் சகோதரி!

சுந்தர்ஜி said...

பொதுவா பெண்களோட சிந்தனை அபாரமாத்தான் இருக்கு ஹேமா.(இதுக்கு எந்த தனி அர்த்தமும் இல்ல அப்பிடின்னு நான் சொன்னா நம்பவா போறீங்க)

ஹேமா said...

சுப்பு தாத்தா...முதலா ஓடி வந்திருக்கார்.பாருங்கோ இதைத்தான் சொல்றது பட்ட அனுபவம்ன்னு !உங்க வீட்டு ஓரு அனுபவம் சொல்லுங்களேன் தாத்தா !


கார்த்திக்...அப்போ இதன் தொடரை உங்கள் பக்கத்தில் சீக்கிரம் காணலாம்ன்னு சொல்றீங்க.
அசத்துங்க LK !


செந்தில்...சரியான பாவமா
இருக்கு உங்க பின்னூட்டம்.
அவ்ளோ கஸ்டமா வீட்ல !


ஸ்ரீராம்....செந்திலை விட நீங்க பாதிக்கப்பட்டிருப்பீங்க போல !ப்ளீஸ்...ப்ளீஸ் ஒரு சின்ன அனுபவம் சொல்லுங்களேன் ஸ்ரீராம் !


நசர்....கும்மி கும்மி மன்னரே இப்பிடியெல்லாம் சொல்லியிருக்கீங்களா வீட்ல.அனுபவம் பேசுது !


ராஜவம்சம்...இப்பவாச்சும்
உங்களை நீங்களே மடையன்னு ஒத்துக்கிட்டீங்க.உங்க மனைவி அறிஞ்சாங்கன்னா சந்தோஷப்படுவாங்க !


வால்பையன்....உங்களை மாதிரி பிறப்பு,காதல்,காமம்ன்னு ஆராய்ச்சி செய்யத் தெரில.அதான் இப்பிடி !


தமிழ்ப்பறவை அண்ணா...இப்பிடி அதிர்ச்சியானா எப்பிடி.இருக்கு இன்னும் கொஞ்ச நாள்தானே.
இப்பவே கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோங்க.தேவைப்படும் !


மது....உங்களுக்கு அனுபவம் இருக்கும்தானே !


சி.கார்த்திக்...திருந்தமாட்டேன்னு சொன்னா என்ன பண்றது.உங்க அதிஸ்டம் அவ்ளோதான் !

அஷோக்....ம்ம்ம்...
என்னா...யார் லூசு !


நேசன்...அட என்ன நீங்க.நல்ல கவிதை போட்டிருக்கேன்.அங்க ஒண்ணும் சொல்லாம இந்தப் பதிவுக்குப் போய் ரொம்பத்தான் யோசிக்கிறீங்க !


பிரசன்னா...அதானே நீங்கள்ளாம் யாரு.அது தெரிஞ்சபடியாத்தான் பாவமான உங்களைப் போல இருக்கிறவங்களுக்கு சொல்லித் தந்திருக்கு.கவனமா இருங்கன்னு !


ராதாகிருஷ்ணன் ஐயா...நன்றி.
உங்க அனுபவத்தில ஒண்ணாச்சும் சொல்லியிருக்கலாம் !


குணா...ஓ...இது ஒரு உளவியல் குறிப்பா !கவிதைகளுக்கு இல்லாட்டி உருப்படியான பதிவுகளில உங்க பின்னூட்டம் காணல.
இதுக்குப்போய்...!


வழிப்போக்கன்....பின்ன ..
நாங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க.
நம்பத்தான் மாட்டேன்னு எல்லாரும் அடம் பிடிக்கிறீங்க !


கும்மாச்சி...அவரு பாவமா.சரிதான் !


அம்மிணி...என்ன எல்லாரும் அவருக்குப் பரிந்துரை பண்றீங்க.சரில்ல சொல்லிட்டேன் !


ஆனந்த்....ஓ...இப்பத்தானே புது அனுபவம்.இந்தப் பதிவுக்கு அப்புறம் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்க.
அவங்க முகபாவனையோட !

ப்ரியா...இதன் தொடர் கார்த்திக் LK பதிவிடுறேன்ன்னு சொல்லியிருக்கார்.
காத்திருப்போம்.ரவி எதிர்ப்பதிவு போட்டிருக்காரே.பாக்கலியா ?


ஜெயா...ஆண்களைப் பற்றித் தெரியாதா...!இதெல்லாம் மறந்திடுவாங்க.
ஞாபகப்படுத்தாதீங்கப்பா !


ஜீவன் அமுதன்....ஒரு நாளைக்கே ரொம்ப இப்பிடி அலுத்தா பாவம்தானே அவங்க !


ஜெய்...யாரு பாவம்.
யாரு வாயைத் திறக்கல !


இரவீ...பேசாதீங்க சொல்லிட்டேன் !உங்க பதிவு பாத்து ஒரு குடும்பத்திலயே குழப்பமாச்சு !


றோஸ்...எனக்குத் தெரியும் யாருக்குக் குடுப்பீங்கன்னு.அட காட்டாதீங்க.காட்டினா கவனமாயிடுவாங்க !


செ.குமார்...வாங்க வாங்க.வீட்ல கேட்டீங்களா உள்குத்து ஏதாவது இருக்குமான்னு.இல்லைன்னு தான் சொல்லியிருப்பாங்க.நம்பணும் நீங்க !


நிலாமகள்...முதல் எட்டிப் பாத்தீங்களா?ஏன்?என்னைப் பிடிக்காம இருந்திச்சா ?இனி வருவீங்க.
கவிதைப் பக்கமும்
எட்டிப் பாருங்க நிலா.


சுந்தர்ஜி...ஏதாச்சும் ஒரு சின்னதா உங்க வீட்டு அனுபவம் சொல்லுங்களேன் !

அண்ணாமலை..!! said...

ஆகா! பெரிய ஆராய்ச்சியே நடத்தியிருப்பாங்க போலிருக்கே!
ம்.ம்!!!!
:)

Anonymous said...

ஹேமா, பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் தொடர்பதிவுக்கு உங்களைக்கூப்பிடலாம்னு இருக்கேன்.

ஆ.ஞானசேகரன் said...

//நான் ஒண்ணுமே சொல்லலங்கோ.உங்க எல்லாருக்கும் சொல்லச் சொல்லி ஒரு நியூஸ் வந்திருக்கு.சொல்லிட்டேன் ஆளை விடுங்க !//

ம்ம்ம்ம் நல்லாயிருக்கே

லெமூரியன்... said...

ஊருக்கு போயிருந்தேன்..!
அதான் உங்க பதிவுகளை தொடர முடியல...!
ஆஹா எவ்ளோ அற்ப்புதமான விஷயம் சொல்லியிருக்கீங்க ஹேமா...
தக்க நேரத்தில் உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி...!

:-) :-) :-)
கண்டிப்பா இந்த விஷயங்களை மனதில் மாட்டிக் கொள்வேன்..!

சிநேகிதன் அக்பர் said...

இது புதுக்கதையா இருக்கே!

சின்னபாரதி said...

கொஞ்சம் 2004 க்கு முன்னாடியே சொல்லியிருந்தா ? இவ்வளவு சேதாரம் இருந்திருக்காது . இப்ப ஒன்னு கெட்டுப் போகலை.... நன்றி

சின்னபாரதி said...

எல்லோரும் சொல்லியிருந்தலும்
மதுமிதா சொல்லுவதைக் கேளுங்க ...

அப்படியே !
ஆண்கள் சொல்றதுக்கு ... என்ன அர்த்தமென்றும் சொல்லிவிடுங்கோ
இல்லைன்னா ....
பெண்கள் நல அமைப்பிலிருந்து கண்டணம் கூட வரலாம்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP